புதுடில்லி: செல்வாக்குமிக்க உலகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 76 விழுக்காடு வாக்குகளுடன் மீண்டும் முதலிடத்தில் வந்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, வெளியிட்ட செல்வாக்குமிக்க உலகத் தலைவர்கள் பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபராடோர் 66 % வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 58 % வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
‘மார்னிங் கன்சல்ட்’ 22 நாடுகளில் கருத்துக் கணிப்பு நடத்தி செல்வாக்குமிக்க உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 75-80 % வாக்குகள் பெற்று திரு மோடி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.