மாலத்தீவு விவகாரம் குறித்து ஜெய்சங்கர்: இதெல்லாம் அரசியலில் வழக்கம்

புதுடெல்லி: அரசியல், அரசியல்தான். ஒவ்வொரு நாடும் நம்மை ஆதரிக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று மாலத் தீவு விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை மாலத் தீவின் மூன்று அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததால் மூன்று அமைச்சர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனாவின் ஆதரவாளரான மாலத் தீவு அதிபர் முகம்மது முய்சு, இந்திய ராணுவம் தனது நாட்டிலிருந்து மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இரண்டு நாடுகளுக்கு இடையிலான உரசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் மாலத் தீவு பிரச்சினை குறித்து கருத்துரைத்துள்ள ஜெய்சங்கர், அரசியலில் இதெல்லாம் வழக்கமானது என்பது போல கூறியுள்ளார்.

“அரசியல் அரசியல்தான். எப்போதும் ஒவ்வொரு நாடும் இந்தியாவை ஆதரிக்கும் அல்லது உடன்படும் என எதிர்பார்க்க முடியாது,” என்றார் அவர்.

“உலக நாடுகளுடன் வலுவான பிணைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட்ட கடந்த பத்து ஆண்டு முயற்சிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இருந்தாலும் அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். நாட்டின் மக்கள் மற்றும் சமூகத்தினர் பொதுவாக இந்தியா மீது நல்ல எண்ணங்களை வைத்துள்ளனர். இந்தியாவுடனான நல்லுறவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர்,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறினார்.

இந்தியா தனது ராணுவத்தை மார்ச் 15ஆம் தேதிக்குள் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு காலக்கெடு விதிப்பதற்கு ஒரு நாள் முன்பு சனிக்கிழமை அன்று நாக்பூரில் நடந்த மாநாட்டில் ஜெய்சங்கர் பேசினார்.

அப்போது, இதர நாடுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அவர் பட்டியலிட்டார்.

“இன்று மற்ற நாடுகளில் சாலைக் கட்டுமானம், மின்சாரம், எரிபொருள் விநியோகம், வர்த்தக வழிகாட்டல், முதலீடுகள் செய்தல், பிற நாடுகளில் விடுமுறையைக் கழிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறோம்,” என்ற அவர், “இவையெல்லாமே நல்லுறவை வளர்க்கும் முயற்சிகளில் ஒரு பங்கு என்று குறிப்பிட்டார்.

“சில நேரங்களில் சில விவகாரங்கள் நல்ல வழியில் செல்லாது,” என்றார் திரு ஜெய்சங்கர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!