மத்திய அரசு: தென்னிந்தியாவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 விழுக்காடு நீர் மட்டுமே மிச்சம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நீர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களை மத்திய நீர் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள 42 நீர்த்தேக்கங்களின் சராசரி நீர் கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) ஆகும்.

அண்மைய ஆய்வு முடிவின்படி தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் தற்போது 8.865 பில்லியன் கன மீட்டர் அளவுக்கான தண்ணீர் மட்டுமே உள்ளது. இது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் 17 விழுக்காடாகும் என்று ஆணையம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்குக் காரணம், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நடப்பாண்டில் போதிய அளவு மழை பொழியவில்லை. இதேபோன்று மகாநதி மற்றும் பெண்ணாறு படுகைகளுக்கு இடையே கிழக்கு நோக்கிப் பாயும் நதிகளிலும் நீர்வரத்து மிகக் குறைவாக உள்ளது.

இந்நிலையில், இப்போது 17 விழுக்காடு மட்டுமே தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் மிச்சம் உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஆகிய மாநிலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, வேளாண்மை நீர்ப்பாசன தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தியில் பின்னடைவு உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளாகத் தென்னிந்திய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 23 விழுக்காடு தண்ணீர் இருப்பு இருந்தது. அதிலும் கடந்த 2023ஆம் ஆண்டில் 29 விழுக்காடு தண்ணீர் இருப்பு இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!