இந்தியா

கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து உற்பத்தியாளர்களிடம் இருந்தும் மசாலா பொருள்களின் மாதிரிகளைச் சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாட்டியாலா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கு அதில் கலந்திருந்த அளவுக்கதிகமான செயற்கை இனிப்பூட்டியே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதுடெல்லி: இலவசத் திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் லாரியா டா கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.