ஆள் பாதி ஆடை பாதி

பெண்களுக்கு ஆடைத் தேர்வில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது ‘ஃபேஷன்’ மாறினாலும் உடல்வாகு, சரும நிறத்துக்கேற்ற ஆடை நிறங்களையும் துணி வகைகளையும் தேர்வு செய்வது அவசியம்.

அவ்வாறு தேர்வு செய்வது தோற்றம் தொடர்பான தயக்கத்தை உடைத்து தன்னம்பிக்கையையும் அதிகரிக்கலாம்.

தற்போது சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய அடிப்படை நிறங்களைவிட, அவற்றின் சேர்க்கையில் உருவாகும் மாறுபட்ட நிறங்களைத் தேர்ந்தெடுத்து அணிவதில் இளையர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஊதா, ‘டர்காய்ஸ்’ போன்ற ‘ஹூ’ (Hue) நிறங்கள், அன்றாடப் பயன்பாட்டுக்குச் சிறந்த தேர்வு. இவை பளிச்சென்ற தோற்றத்தைத் தருவதோடு ஒருவித உற்சாகத்தையும் தூண்டும்.

சற்றே பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு ‘ஷேட்ஸ்’ எனும் கறுப்பு கலந்த அடர் நிறங்களும் மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு ‘டிண்ட்’ எனும் வெள்ளை கலந்த வெளிர் நிறங்களும் நல்ல தேர்வாக அமையும்.

‘டோன்’ எனப்படும் சாம்பல் கலந்த கண்ணை உறுத்தாத நிறங்கள் எல்லா சரும நிறத்துக்கும் எல்லா உடல்வாகுக்கும் பொருந்தும். நிறங்களில் குழப்பம் ஏற்படுபவர்கள் விரைவில் தேர்வு செய்யவும் இவை ஏற்றவை.

கல்லூரிக்கும் வேலைக்கும் செல்லும் இளம் பெண்களுக்கு, சிறந்த அன்றாடத் தேர்வு லாவெண்டர், பீச் உள்ளிட்ட அதீத வெளிர் தன்மை உடைய ‘பேஸ்டல்’ நிறங்கள். இவை நயமான, அதே சமயம் வசீகரமான தோற்றத்தை அளிக்கும்.

‘மோனோக்ரோம்’ எனும் ஒரே வண்ணமுடைய உடைக்கும் அதனுடன் மாறுபட்ட எதிர் நிறத்துடன் கலந்து அணியவும் சிறந்த தேர்வு இவை. எவ்வகை நிறத்துக்கும் பொருத்தமாக இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. சேலை முதல் சட்டை வரை அனைத்து ஆடைகளையும் இந்த நிறங்களில் அணியலாம்.

இரவுநேர விழாக்கள், நண்பர்களுடன் பயணம் போன்ற துள்ளலான நிகழ்வுகளுக்கு ஏற்றவை ‘நியான்’ எனப்படும் அதீத பிரகாசத் தன்மை கொண்ட நிறங்கள். பொதுவாக ‘வெஸ்டர்ன்’ எனும் மேல்நாட்டு வகை ஆடைகளில் நியான் நிறங்கள் சிறந்த தேர்வு.

நிறத் தேர்வுக்கு அடுத்து, கவனத்தில் கொள்ள வேண்டியவை, அந்த நிறத்துடன் பொருந்தும் மற்றொரு நிறம்.

‘மோனோக்ரோம்’ எனப்படும் ஒரே வண்ணத்தில் ஆடை அணிவது அண்மைய ‘ஃபேஷன்’.

அடுத்த பிரபலமான தேர்வு ‘அனாலகஸ்’ (Analogous) எனும் ஒரே குடும்ப நிறங்களின் சேர்க்கை; நிறச் சக்கரத்தில் (Color Wheel) அடுத்தடுத்து இருக்கும் நிறங்களைச் சேர்த்து அணிவதாகும்.

மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா, நீளம், பச்சை ஆகிய வண்ணங்களில் ஏதேனும் ஒன்றை, அதற்கடுத்த வண்ணத்துடன் சேர்த்து அணிவது பிரபலமான தேர்வு.

இதன் உள் வகையாக, ஒரே நிறத்தின் அடர், வெளிர் வகைகளையும் கலந்து அணிவது ‘டோனல்’ எனப்படுகிறது. இவை ஆடை தொடங்கி, வீடு உள் அலங்காரம் வரை பிரபலமாக உள்ளது.

நேரெதிர் நிறங்களைச் சேர்த்து அணியும் ‘காம்ப்ளிமென்டரி’ எனும் வகை சேர்க்கை, நீண்ட நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாகக் கண்ணைப் பறிக்கும் வகையில் உடையணிய ஆசைப்படுபவர்களுக்கான தேர்வு இது. குறிப்பாக, உடையில் 75 விழுக்காடு ஒரு நிறமும் 25 விழுக்காடு மற்றொரு நிறமும் இருப்பது ஒரு சமநிலைத் தோற்றத்தை உருவாக்கும்.

நிறச் சக்கரத்தில், சம அளவு இடைவெளியில் அமைத்த மூன்று நிறங்களின் கலவையை அணிவது ‘ட்ரையாடிக்’ எனப்படுவது. கவுன் போன்ற ஒரே உடையில் மூன்று நிறங்கள், கால் சட்டை, மேலாடை, ‘ஓவர் கோட்’ எனும் மேலங்கி ஆகிய மூன்றையும் மூன்று நிறங்களில் அணிவது, மேலாடை, கால்சட்டை, கைப்பை ஆகிய மூன்றும் மூன்று நிறங்களில் அமைவதும் இதே ‘ட்ரையாடிக்’ வகையில் சேரும். தனித்துவமாகத் தெரிய விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

நீண்ட நாட்களாக பின்பற்றப்படும் மற்றொரு வகை ‘ஆக்ஸெண்ட்’ எனப்படும் வண்ண ஆடைகளை வெள்ளை அல்லது கறுப்புடன் கலந்து அணிவது. மிக நுட்பமான உடைத்தேர்வு கொண்டவர்கள் தவிர பெரும்பாலானோரிடம் அண்மையில் பிரபலமில்லாத சேர்க்கை வகை இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!