குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்

உணவுக் குழாய் ஆரோக்கியமாக இருந்தால் மனிதர்களின் நோயெதிர்ப்பாற்றல் சிறப்பாக இருக்கும். அதை ஆரோக்கியமாக வைத்திருக்க, பல்வேறு உணவு வகைகள் கைகொடுக்கின்றன.

உணவுக் குழாயில் பல்வேறு நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. அவற்றை நல்லமுறையில் பாதுகாத்தால் குடல் நன்றாக இயங்கும்.

‘புரோபயாட்டிக்ஸ்’ எனப்படும் உடலுக்கு நலம் பயக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் நமது செரிமானக் குழாய் நன்கு பாதுகாக்கப்படுகிறது.

புரோபயாட்டிக்ஸ்

இயற்கையாகவே ‘புரோபயாட்க்ஸ்’ நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் நமது குடலில் நல்ல நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் கூட்டலாம். தயிரில் அதிக அளவில் இந்த வகை நுண்ணுயிரிகள் அடங்கியுள்ளன.

குடல் நுண்ணுயிரிகளைச் சமநிலைப்படுத்தவும் நாட்பட்ட நோயைத் தடுக்கவும் உதவுவதோடு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் இதயத்தையும் தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ‘புரோபயாட்க்ஸ்’ நுண்ணுயிரிகள் உதவுகின்றன.

கிம்ச்சி

கிம்ச்சி எனப்படும் புளிக்கவைக்கப்பட்ட முட்டைக்கோசு கொரிய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் சுவையைக் கூட்ட முள்ளங்கி, இறால் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

மிசோ

மிசோ என்பது சோயாபீன்ஸ், பார்லி அல்லது அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த பசை வகை. மற்ற புளித்த உணவுகளைப் போலவே உணவுக் குழாய்க்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் இதில் அதிகம் அடங்கியுள்ளன. சோயாபீன்சிலிருந்து தயாரிக்கப்படும் மிசோவை உட்கொண்டால் புரதச் சத்தும் கிடைக்கும்.

டெம்பே

டெம்பே ஒருவகை புளித்த உணவாகும். அதில் ‘புரோபயாடிக்’ உள்ளது. அதிக புரதம் உள்ளதால் மரக்கறி உணவு உண்பவர்களுக்கு டெம்பே நல்ல தேர்வாக அமைகிறது.

வெங்காயம்

வெங்காயத்தில் குடல் நுண்ணுயிரிகளை உருவாக்க உதவும் ஆற்றல் உள்ளது. அது வயிற்றுப்போக்கு, எலும்புத் தேய்மானம், இதயத் தமனி தடித்துப்போதல், இரைப்பைக் கோளாறு உள்ளிட்ட பல கோளாறுகளைச் சரிசெய்ய உதவும்.

ராஸ்பெர்ரி

ஒரு கப் ராஸ்பெர்ரியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது. ராஸ்பெர்ரி பழங்களில் பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன. அவை நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்கக் கைகொடுக்கின்றன.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

வாயுக் கோளாறு ஏற்படுமெனப் பயந்து பலர் பீன்சைத் தவிர்க்கிறார்கள். ஆனால் குடலில் வாயு ஏற்படுவது, குடல் நுண்ணுயிரிகள் கடினமாக வேலை செய்கின்றன என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளான கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி, வெள்ளை பீன்ஸ் போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலைச் சென்றடையும்போது அப்படியே இருக்கிறது. அங்குதான் குடல் நுண்ணுயிரிகள் அவற்றை உண்கின்றன.

பூண்டு

ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக பூண்டு இதயநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதோடு உடலில் அழற்சி எதிர்ப்பு தன்மையையும் ஏற்படுத்த வல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழங்கள் குடலுக்கு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றன. அவற்றில் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும் ஒரு வகை ஜீரணிக்க முடியாத நார்ச்சத்தும் உள்ளன. அவற்றை உண்பதால் குடலில் அதிக நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் உருவாகின்றன.

பேரிக்காய்

பேரிக்காய் குடலுக்கு ஏற்ற உணவாகும். அது கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுவதோடு பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!