தமிழ்த் திறன்களை வெளிக்காட்டிய நவரச மேடை 2024

தமிழ்மொழி மாதத்தில் பல தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆற்றல் என்ற கருப்பொருளில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘தமிழர் திருநாள் - நவரச மேடை 2024’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடக்கநிலை மாணவர்களுக்கான போட்டிகளான ‘நவரச மேடை 2024’, என்ற நிகழ்ச்சியை 2022 முதல் நடத்தி வருகின்றது மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு. இந்த ஆண்டு ஆக அதிகமான போட்டியாளர்களின் படைப்புகளைப் பெற்றது.

ஆறு பிரிவுகளில், 36 தொடக்கநிலைப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் மொத்தம் 135 தமிழ்க் காணொளிப் படைப்புகளை அனுப்பியிருந்தனர்.

தாய்மொழியார்வத்தை சிறுவர்களிடத்தில் மின்னிலக்க ஊடகங்கள்வழி வளர்ப்பதன் வெற்றியை இந்த எண்ணிக்கை பறைசாற்றியது.

தொடக்கநிலை ஒன்றுக்குப் பாடல், தொடக்கநிலை இரண்டுக்கு வெவ்வேறு தொழில்களில் பணியாற்றுவோராக நடிப்பு, தொடக்கநிலை மூன்றுக்கும் ஐந்துக்கும் பேச்சு, தொடக்கநிலை நான்குக்குக் கதை சொல்லுதல் மற்றும் தொடக்கநிலை ஆறுக்கு இணைய கதைப் புத்தகம் உருவாக்குதல் என ஆறு போட்டிகள் நடைபெற்றன.

“பொதுவான மொழியைப் பேசுவது சமூக உணர்வை வளர்க்கிறது. காணொளி வடிவில் அமைந்த போட்டி, அனைத்துப் பின்னணிகளையும் சார்ந்த மாணவர்கள் தம் மொழித் திறன்களைக் காண்பிக்க நல்வாய்ப்பளித்தது,” என்றார் மார்சிலிங் இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினரும் ‘நவரச மேடை 2024’ன் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திருமதி நூர்மானிஷா சர்மணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!