அன்பு மனைவியுடன் நகர்வலம் சென்ற மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது வாரயிறுதியான இன்று (நவம்பர் 23) மனைவியுடன் கோலாலம்பூரின் பல இடங்களுக்கு நகர்வலம் மேற்கொண்டார்.

94 வயது டாக்டர் மகாதீர், மனைவியுடன் அவரது புரோட்டான் காரை ஒட்டிச் செல்வதைக் காட்டும் காணொளியும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றன.

“மனைவி ஹஸ்மாவை நான் அவ்வப்போது அன்புடன் வெளியில் அழைத்துச் செல்வதுண்டு,” என்று தனது இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாலன் புக்கிட் பின்டாங்கில் உள்ள காப்பிக் கடை ஒன்றில் அந்தத் தம்பதி சிறிது நேரத்தைச் செலவிட்டனர்.

திரு மகாதீரின் அந்தப் பதிவு வலைத்தளங்களில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் தம்பதியர் அன்பைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் அவர்களது இந்தப் பயணம் பற்றியும் வலைத்தளவாசிகள் தங்கள் கருத்துகளைப் பதிந்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!