(காணொளி): எலி புளுக்கைகளுடன் அருவருக்கத் தக்க நிலையில் இருந்த சோயா தொழிற்சாலையை மூட உத்தரவிட்ட மலேசியா

சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக, கோலாலம்பூரில் இருக்கும் சோயா உணவுப்பொருள் செயலாக்க தொழிற்சாலை ஒன்றை கோலாலம்பூர் நகரமன்றம் (DBKL) நேற்று (ஜூன் 15) மூடியது.

சுகாதார மற்றும் சுற்றுப்புறத் துறையைச் சேர்ந்த DBKL அதிகாரி ஒருவர், அந்த தொழிற்சாலையின் நிலைமையைப் பார்த்து இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

Remote video URL

“அந்த இடத்தைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாந்தி வந்தது. இனிமேல் சோயாவையே சாப்பிடக்கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கு அந்த இடம் மோசமாக இருந்தது,” என்றார் அவர்.

பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின்படி அந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு கரப்பான்பூச்சிகளும் எலியின் எச்சங்களும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த நிலவரப்படி, தரையில்தான் சோயா தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கையுறை, தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை; அவர்களில் பலர் சட்டைகூட அணிந்திருக்கவில்லை.

உணவுப் பொருள்கள் சட்டம் 1983ன் 11வது பிரிவின்கீழ் அந்த தொழிற்சாலை 14 நாட்களுக்கு மூட ஆணையிடப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!