மலேசியா: 15 பில்லியன் ரிங்கிட் சிறப்பு உதவித்திட்டங்கள் அறிவிப்பு

மலே­சி­யா­வில் கொவிட்-19 தொற்று பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்து வரும் நிலை­யில், 15 பில்­லி­யன் ரிங்கிட் (S$4.93 பி.) மதிப்­பி­லான சிறப்பு உத­வித் திட்­டங்களை அந்­நாட்­டின் பிர­த­மர் முகை­தீன் யாசின் அறி­வித்­துள்­ளார்.

‘மலே­சி­யப் பொரு­ளி­யல், மக்­கள் பாது­காப்பு உத­வித் தொகுப்பு (பெர்­மாய்)’ எனும் அந்த சிறப்பு உத­வித் தொகுப்­பின்­கீழ் 22 திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

ஏற்­கெ­னவே நான்கு பொரு­ளியல் ஊக்­கு­விப்­புத் தொகுப்­புத் திட்­டங்­க­ளின் மூலம் 305 பில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­பி­லான உத­வித் திட்­டங்­களை அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது என்று திரு முகை­தீன் தமது உரை­யின்­போது குறிப்­பிட்­டார்.

கொரோனா தொற்­றைக் களை­வது, மக்­கள் நல­னைப் பாது­காப்­பது, வர்த்­த­கங்­க­ளுக்­குத் தொடர்ந்து ஆத­ர­வ­ளிப்­பது ஆகியவையே ‘பெர்­மாய்’ சிறப்பு உத­வித் திட்­டத்­தின் முக்­கிய நோக்­கங்­கள்.

அனைத்து முன்­கள மருத்­து­வப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் ஒரு­முறை மட்­டும் 500 ரிங்­கிட் ஊக்­கத்­தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதே­போல, 14,000 சுற்­றுலா வழி­காட்­டி­கள், 118,000 வாடகை கார், பள்ளி, சுற்­று­லாப் பேருந்து ஓட்­டு­நர்­க­ளுக்­கும் ஒரு­முறை மட்­டும் 500 ரிங்­கிட் நிதி­ உதவி வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதி­தாக 3,500 சுகா­தா­ரப் பரா­மரிப்­புப் பணி­யா­ளர்­கள் பணி­யில் அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­னர். தடுப்­பூசி நிறு­வ­னங்­க­ளு­டன் மூன்று உடன்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறிய பிர­த­மர், முதல் தொகுதி தடுப்­பூ­சி­கள் அடுத்த மாதம் வந்­த­டை­யும் என்­றும் சொன்­னார்.

தேசிய அள­வி­லான கொரோனா தடுப்­பூ­சித் திட்­டத்­திற்கு மூன்று பில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கப்­பட்­டு உள்­ளது. அத்­து­டன், சுகா­தார அமைச்­சிற்­குக் கூடு­த­லாக 900 மில்லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கப்­பட இருக்­கிறது.

மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்று ஏறு­மு­கத்­தில் இருப்­பதை அடுத்து, ஆறு மாநி­லங்­க­ளி­லும் மூன்று கூட்­ட­ர­சுப் பகு­தி­க­ளி­லும் இம்­மா­தம் 26ஆம் தேதி வரைக்­கும் நட­மாட்­டக் கட்­டுப்­பாடு­கள் அறி­விக்­கப்­பட்டுள்­ளன.

வங்­கிக்­க­ட­னைக் காலந்­தாழ்த்­தித் திருப்­பிச் செலுத்­தும் வசதி நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு யூனிட்­டிற்கு இரண்டு காசு என, இவ்­வாண்டு ஜூன் மாதம் வரைக்­கும் மின்­கட்­ட­ணக் கழிவு வழங்­கப்­படும். இத­னால் 9% வரை­யி­லான கட்­ட­ணத்தை மிச்­சப்­ப­டுத்­த­லாம் எனக் கூறப்­பட்­டது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான சிறப்பு மானி­யம், உத­வித் திட்­டம் நீட்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதன்­படி, நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றை­யில் இருக்­கும் சில மாநி­லங்­களில் உள்ள 500,000 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு 1,000 ரிங்­கிட்­டும் மற்ற மாநி­லங்­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 500 ரிங்­கிட்­டும் உத­வித்­தொ­கை­யாக வழங்­கப்­படும்.

முதன்­மு­றை­யாக நேற்று முன்­தினம் ஒரே நாளில் அங்கு நாலா­யி­ரத்­திற்கு மேற்­பட்­டோ­ருக்கு கொரோனா பாதிப்பு உறு­தி­செய்­யப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!