தொழிலதிபர்களுக்கான பயண ஏற்பாடு: மலேசியா, இந்தோனீசியா இணக்கம்

இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே தொழிலதிபர்கள் வர்த்தகப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது.

“இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பயணங்களை மேற்கொள்வோருக்கு சிறப்புப் பயண ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளோம். இந்தோனீசியாவுக்கு மலேசியப் பிரதமர் வருகை அளிக்கும்போது இதுகுறித்து பேசப்படும்,” என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி கூறினார்.

மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா, “நாங்கள் படிப்படியாக எல்லைகளைத் திறப்போம். இயல்புநிலையை நோக்கி நகர்வோம்,” என்று சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!