வயிற்றுப் பகுதியை வலுவடையச் செய்யும் நாற்காலி பயிற்சி

முதலில் நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகளை மேலே நேராக நீட்டவேண்டும். உள்ளங்கையை எதிரே இருப்பவருக்குத் தெரிவது போல வைக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, மெதுவாக உடலை வளைத்து, கைகளைப் பாதத்துக்கு முன்பும், பிறகு பக்கவாட்டிலும் பதிக்கவேண்டும். பிறகு, கைகளை மடக்காமல் அப்படியே நிமிர்ந்து, பழைய நிலைக்குத் திரும்பவேண்டும். இதை ஐந்து முதல் 7 முறை செய்ய வேண்டும். பலன்கள்: அடி வயிறு அழுத்தப்படுவதால் வயிறு வலுப்பெறும். மாதவிலக்கு பிரச்சினை சரியாகும். உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். நரம்பு மண்டலத்தைச் சீராகச் செயல்பட வைக்கும். கைகளுக்கு வலிமை தர பல பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலன் தரக்கூடியவை. அவற்றுள் ஒன்று தான் இந்த 'வால் புஷ் அப்ஸ்' பயிற்சி. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நிலையான, சமதளமாக உள்ள சுவற்றுக்கு நேராக, சுவரும் -தரையும் இணையும் இடத்தில் இருந்து சற்றே தள்ளி நிற்கவும். முன்பக்கமாக சாய்ந்து, சுவரின் சமதளத்தில் உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும். இந்த செயலின் போது உங்கள் முழங்கைகள் இரண்டும் முறுக்கிக் கொள்ளமால் நேராக இருக்க வேண்டும். உடல் பகுதி முழுமையும் ஈடுபடும் வகையில் உங்களுடைய மூக்கு சுவரைத் தொடும் வரையிலும் உங்களுடைய முழங்கைகள் இரண்டையும் வளைக்கவும். மெதுவாக உங்களுடைய ஆரம்ப நிலைக்கு கொண்டு வந்து விட்டு, மீண்டும் ஒரு முறை முழுமையாக முயற்சி செய்யவும். இவ்வாறு இந்தப் பயிற்சியை 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கைகள் நல்ல வலிமை அடைவ துடன் கைகளில் உள்ள அதிகப் படியான சதையும் குறையும். செய்திகள்/ படங்கள்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!