தைப்பூசத்துக்காக பாதை மாறும் எஸ்பிஎஸ், எஸ்எம்ஆர்டி பேருந்துகள்

இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சில சாலைகள் மூடப்படுவதால் 24 பேருந்துகளின் பயணப் பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகிய இரண்டு பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் நேற்று தனித்தனியாக வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தன. 7, 14, 16, 21, 23, 36, 64, 65, 66, 111, 123, 124, 125, 130, 131, 139, 141, 143, 147, 162M, 166, 174, 175 ஆகிய 23 பேருந்துகளும் பென்கூலன் ஸ்திரீட், பிராஸ் பாசா ரோடு, கிளமென்சியூ அவன்யூ, மிடில் ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு, பினாங் ரோடு, சிராங்கூன் ரோடு பாதைகளில் பத்து பேருந்து நிறுத்துமிடங்களை தவிர்க்கும்.

வரும் சனிக்கிழமை இரவு 9.00 மணியிலிருந்து ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை 3.00 மணி வரையில் இந்த மாற்றம் நீடிக்கும். எஸ்எம்ஆர்டியின் 857 பேருந்து சேவையும் அதே காலகட்டத்தில் மிடில் ரோடு, பிராஸ் பாசா ரோடு, சிராங்கூன் ரோடு பாதையில் உள்ள நிறுத்துமிடங்களைத் தவிர்க்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!