புக்கிட் பாத்தோக்கில் முரளி பிள்ளை, சீ சூன் ஜுவான் மீண்டும் போட்டி

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் முரளி பிள்ளைக்கு எதிராக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் ஜுவான் போட்டியிடுகிறார்.

இதற்கு முன்னர் திரு முரளி பிள்ளையும் சீ சூன் ஜுவானும் 2016ஆம் ஆண்டு புக்கிட் பாத்தோக்கில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

அதில் திரு முரளி பிள்ளை 61.2 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு டேவிட் ஓங், தமக்கு எதிராகப் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் திரு சதாசிவம் வீரையா, சுயேச்சை வேட்பாளர் சமீர் சலிம் நெஜி ஆகியோரை வெற்றி கொண்டு நாடாளுமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.