துவாஸ் சோதனைச்சாவடியில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

துவாஸ் சோதனைச்சாவடியில் மேலும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சேர்ப்பது பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அந்தச் சோதனைச்சாவடியில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூர் வாகன ஓட்டி ஒருவர் தன் காரை கட்டுப்படுத்த முடியாமல் துணை காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மோதிவிட்டார். அந்த அதிகாரி கடுமையாக காயமடைந்துவிட்டார். 

பரிசீலிக்கப்பட்டு வரும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் மேலும் வாகனத் தடை சட்டங்களை அமைப்பது, அதிகாரிகள் பணியாற்றும் கண்காணிப்பு மேடையை வாகனம் வரும் வழியில் இருந்து விலக்கி வேறு இடத்தில் வைப்பது ஆகியவை அடங்கும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார்.

ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் தாக்கல் செய்திருந்த நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் அமைச்சர் சண்முகம் இந்த விவரங்களைக் குறிப்பிட்டார். 

சோதனைச்சாவடி வழியாக அங்கீகாரம் இல்லாமல் வாகனங்கள் வந்து செல்வதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக துணை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்புக் கூடத்தில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 

அந்தக் கூடம் அமைந்துள்ள இடத்தில்தான் மார்ச் மாதம் விபத்து நிகழ்ந்துவிட்டது என்று அமைச்சர் தன் பதிலில் விளக்கினார். 

வாகனத்தை ஓட்டி வந்த 42 வயது ஆடவர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் துவாஸ் சோதனைச்சாவடிக்குச் செல்லும் மேம்பாலப் பாதை வழியாக அதிவேகத்தில் காரை ஓட்டி வந்ததாக முதல் கட்ட புலன்விசாரணை மூலம் தெரியவந்தது.

அந்த விபத்தை அடுத்து வாகன ஓட்டுநரும் அதிகாரியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

ஆணையமும் அந்த அதிகாரியின் நிறுவனமான ‘செர்டிசும்’ அவருடைய குடும்பத்துடன் தொடர்புகொண்டு தொடர்ந்து உதவியையும் ஆதரவையும் வழங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

காரை ஓட்டி வந்தவர் விபத்து நிகழ்ந்த நாளன்றே கைதானார்.  புலன்விசாரணை நடப்பதால் மேலும் தகவல்களை வெளியிட இயலாது என்று அமைச்சர் தெரிவித்தார். 

சோதனைச்சாவடி பகுதியில் இப்போது பல பாதுகாப்பு ஏற்பாடுகள் நடப்பில் இருந்து வருகின்றன. அதிகாரிகளும் இருவர் இருவராக பணியில் அமர்த்தப்பட்டு போக்குவரத்தைக் கண்காணித்து வருகிறார்கள். 

சாலைகளில் போதிய அளவுக்கு வெளிச்சம் இருப்பதை ஆணையம் உறுதிப்படுத்துகிறது என்று கூறிய அமைச்சர், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். 

“அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படியவேண்டும். குடித்துவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டுவதால் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம் என்பதையே இந்த விபத்து புலப்படுத்தி இருக்கிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!