தாவரம் சார்ந்த உணவுத் தெரிவுகளை வழங்கும் மருத்துவமனைகள்

சிங்கப்பூரில் சில மருத்துவமனைகள் உள்நோயாளிகளுக்குத் தாவரம் சார்ந்த உணவுத் தெரிவுகளை வழங்கத் தொடங்கியுள்ளன.

தங்களது நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளின் ஒரு பகுதியாக அவை இதனை மேற்கொண்டு வருகின்றன.

உடல்நலத்திற்கு ஏற்றவை, சமச்சீரான ஊட்டச்சத்து கொண்டவை என மதிப்பிட்ட பின்னரே அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

அலெக்சாண்டிரா மருத்துவமனையும் இங் டெங் ஃபோங் மருத்துவமனையும் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாட்டிறைச்சியையும் ஆட்டிறைச்சியையும் தங்கள் உள்நோயாளி உணவுத் தெரிவுப் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டன.

அவற்றுக்கு மாற்றாக சோயா புரதம் கொண்டு செய்யப்பட்ட, தாவரம் சார்ந்த உணவுத் தெரிவுகளை அவை வழங்குகின்றன.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனை 2023 ஜனவரியிலிருந்தும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை 2018ஆம் ஆண்டிலிருந்தும் தங்கள் உள்நோயாளிகளுக்கு தாவரம் சார்ந்த உணவுத் தெரிவுகளை வழங்கி வருகின்றன.

மனித நடவடிக்கைகள் மூலம் வெளியாகும் கரியமிலவாயுவில் கிட்டத்தட்ட 12 விழுக்காட்டிற்குக் கால்நடைகள் காரணமாக உள்ளன என்று ஐக்கிய நாட்டு உணவு, வேளாண் நிறுவனம் தெரிவிக்கிறது.

“நன்கு திட்டமிடப்பட்ட தாவரம் சார்ந்த உணவானது உடல்நலத்திற்கு பெரும்பயனைத் தரலாம். தாவரம் சார்ந்த உணவுகளை நாம் சேர்த்துக்கொள்வதன்மூலம் நீண்டகால நோக்கில் சுற்றுச்சூழலிலும் நீடித்த நிலைத்தன்மையை மேம்படுத்தலாம்,” என்று தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்நான்கு மருத்துவமனைகளில் உணவு சார்ந்த கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத உள்நோயாளிகள் மட்டுமே தாவரம் சார்ந்த உணவுகளைத் தெரிவுசெய்ய முடியும்.

இப்போதைக்கு அலெக்சாண்டிரா, இங் டெங் ஃபோங் மருத்துவமனைகள் வாரம் இரண்டு, மூன்று முறை நண்பகல், இரவு உணவிற்கு தாவரம் சார்ந்த உணவுத் தெரிவுகளை வழங்கி வருகின்றன.

அதுபோல், கேகே மகளிர், சிறார் மருத்துவமனை வாரம் இருமுறையும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை எல்லா வேளைகளுக்கும் தாவரம் சார்ந்த உணவுத் தெரிவுகளை வழங்கி வருகின்றன.

ஆயினும், அம்மருத்துவமனைகளில் ஐந்து முதல் 15 விழுக்காட்டினரே தாவரம் சார்ந்த உணவுகளைத் தெரிவுசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!