சிங்கப்பூரில் நீரிழிவுக்கு எதிரான போர்: 'டி' குறியிட்ட பானங்களை விளம்பரப்படுத்த முடியாது

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் மது பானங்கள் தவிர மற்ற முன் தயாரிக்கப்பட்ட இனிப்பு பானங்களில் ‘ஏ’ முதல் ‘டி’ வரையிலான நான்கு விதமான சர்க்கரை அளவுக் குறியீடு இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதில் ‘டி’ குறியீடு மிக சுகாதாரமற்ற முறையிலான பானங்கள் என வகைப்படுத்தப்படும்.

இந்த ‘டி’ குறியீடு பெற்ற பானங்களை விற்பனை செய்வோர் ஊடகங்களில் அந்த பானங்களை விளம்பரம் செய்யக்கூடாது.

இந்த நடைமுறை பின்னர் பபல் டீ, பாரம்பரிய மருந்து வகைகள், மற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்வோரும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

இதை இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்த சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூரில் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் குடிநீரை குடிக்க ஊக்குவிக்கும் நோக்கில் குடி தண்ணீர் வழங்கும் சாதனங்கள் அதிகமாக வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன் தொடர்பில் சபையில் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், “நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற நாம் பல்லாண்டுகால, நீடித்த, முனைப்புடன் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த முயற்சிகளின் பலன் நீண்டகாலத்தில்தான் புலப்படும்,” என்று கூறினார்.

சிங்கப்பூரர்கள் சராசரியாக 10 ஆண்டுகள் உடல்நல பாதிப்புடன் இருக்கின்றனர் என்று தெரிவித்த அமைச்சர் கான், நாள்பட்ட நோயின் சிரமத்தை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியே நீரிழிவு நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் என விளக்கினார்.

‘நுட்ரி கிரேட்’ என்ற அடைமொழியுடன் கூடிய இந்தக் குறியீட்டில் பச்சை முதல் சிவப்பு வரையிலான நான்கு வண்ண தரநிலைகள் இருக்கும். அதில் சர்க்கரை அளவு, பூரித கொழுப்பு அளவு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதில் அதிக சுகாதாரமான ‘ஏ’ தரநிலை பானங்களில், 100 மில்லி லிட்டர் அளவு பானத்தில், சர்க்கரை அளவு 1 கிராம் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும். அதேபோல், பூரித கொழுப்பின் அளவு இதில் 0.7 கிராம் அல்லது அதற்குக் கீழே இருக்கும்.

அதிக சுகாதாரமற்ற ‘டி’ தரநிலை பானங்களில், 100 மில்லி லிட்டர் அளவு பானத்தில், 10 கிராம் அல்லது அதைவிட அதிக அளவு சர்க்கரை, 2.8 பூரித கொழுப்பு இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!