பாதுகாப்பான, கனிவான இணைய சமூகம் அமைய மூன்று அணுகுமுறைகள்

சிங்­கப்­பூ­ரின் பாது­காப்­பான, கனி­வான இணைய சமூ­கம் அமைய மூன்று வழி­க­ளைப் பரிந்­து­ரைத்­தார் பிர­த­மர் அலு­வ­லக மற்­றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் (படம்). அவை முன்­வ­ரு­தல், முடுக்கி விடு­தல், அடி­யெ­டுத்து வைத்­தல் அணு­கு­மு­றை­கள்.

“பல பங்­கா­ளித்­துவ அணு­கு­மு­றை­களின் முக்­கிய வழி­ந­டத்து­நர் என்ற முறை­யில் அர­சாங்­கம் இதனை முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும்.

“இன்­றைய நிலை­யில் இணைய பாது­காப்­புக்கு எந்த ஒரு தனி அமைப்­பும் பொறுப்­பேற்­றுக்­கொள்ள முடி­யாது. அது பல அமைப்­பு­க­ளின் ஒட்­டு­மொத்த பொறுப்­பாக அமைந்­து­விட்­டது.

“உதா­ர­ணத்­துக்கு, கல்வி அமைச்­சில் பாது­காப்­பான இணை­யப் பயன்­பாடு, தொடர்பு தக­வல் அமைச்­சில் முதி­ய­வர்­க­ளுக்கு மின்­னி­லக்க கல்­வி­ய­றிவு, இளை­யர்­க­ளுக்கு ஊட­கக் கல்­வி­ய­றிவு, சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்­சில் தொண்­டூ­ழிய நல்­வாழ்வு அமைப்­பு­கள் மூலம் ஆலோ­சனை மற்­றும் ஆத­ரவு, சமூக, கலா­சார, இளை­யர்­துறை அமைச்­சில் இளை­யர் மன­நல நல்­வாழ்வு ஆகி­ய­வற்­றில் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது.

“இந்த பன்­முறை அணு­கு­முறைக்கு அர­சாங்க அமைப்­பின் ஆத­ரவு இருக்க வேண்­டும். அந்த அமைப்பு எல்லா பங்­கா­ளித்­துவ அமைப்­பு­களையும் ஒன்­றி­ணைக்க வேண்­டும்,” என்­றும் திரு டான் கூறி­னார்.

இரண்­டா­வது அணு­கு­மு­றை­யாக முடுக்­கி­வி­டு­த­லைக் குறிப்­பிட்ட அமைச்­சர், “ஒவ்­வொரு பங்­கா­ளித்­துவ அமைப்­பும் இணை­யப் பாது­காப்பை முடுக்கிவிட வேண்­டும்,” என்­றார்.

“தனி­யார் துறை­யி­டம் நான் கேட்­டுக்­கொள்­வது என்­ன­வென்­றால், பாது­காப்­பா­கத் தொடங்­கு­வதே பாதி போரை வென்று விட்­டது­ போ­லா­கும்.

“நிறு­வ­னங்­கள் தங்­கள் பொருட்­க­ளின் வடி­வ­மைப்­பைப் பொறுத்து மின்­னி­லக்க சேவை­களை வழங்க வேண்­டும். உதா­ர­ணத்­துக்கு, வங்­கி­கள் தங்­கள் முதிய வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கணக்­கு­களில் ஏதா­வது வழக்­கத்­துக்கு மாறான பரி­வர்த்­த­னை­கள் உள்­ளனவா என்று கவ­னித்து வரு­கின்­றன.

“வாடிக்­கை­யா­ளர்­க­ளின் இணை­யப் பாது­காப்பை உறுதி செய்ய, நிறு­வ­னங்­க­ளின் நிர்­வா­க­மும் அக்­கறை காட்ட வேண்­டும். வீட்­டில் தங்­கள் பிள்­ளை­கள் இணை­யத்­தைப் பாது­காப்­பாக பயன்­ப­டுத்­து­கி­றார்­களா என்­பதை உறுதி செய்­வது பெற்­றோரின் கட­மை­யா­கும்,” என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

மூன்­றா­வது அணு­கு­மு­றை­யாக அடி­யெ­டுத்து வைத்­த­லைக் குறிப்­பிட்ட திரு டான், “தேசிய அள­வி­லான இந்த முயற்­சி­யில் அனை­வ­ரும் அடி­யெ­டுத்து வைக்க வேண்­டும். அப்­போ­து­தான் பாது­காப்­பான, கனி­வான சமூ­கத்தை உரு­வாக்க முடி­யும்.

“தேசிய பணி­வன்பு இயக்­கத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க சிங்­கப்­பூர் கனி­வன்பு இயக்­கம் 1997ல் தொடங்­கப்­பட்­டது. அது­போல, இணை­யப் பாது­காப்பை உறுதி செய்­யும் ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் இயக்­கம் என்ற ஒன்­றைத் தொடங்­க­லாம்,” என்­றும் அமைச்­சர் டான் யோசனை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!