டிரேஸ்டுகெதருக்கு புத்தாக்க விருது

டிரேஸ்டுகெதருக்கு புத்தாக்க விருது

1 mins read
15ad2f58-a8c5-45bc-85b7-971941c3ae5a
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காண சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்­தப்­படும் டிரேஸ்­டு­கெ­தர் திட்டத்துக்கு விருது கிடைத்­துள்­ளது.

மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத்­தைப் புத்­தாக்­கத்­து­டன் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக டிரேஸ்­டு­கெதர் திட்­டத்­துக்கு அந்த அனைத்­து­லக விருதை சந்தை ஆய்வு நிறு­வ­ன­மான கார்ட்­னர் இன்­கார்ப்­ப­ரேட் நேற்று வழங்­கி­யது. உல­கெங்கும் உள்ள அர­சாங்க அமைப்­பு­க­ளி­டம் வாக்­க­ளிப்பு நடத்­திய பிறகு வெற்­றி­யா­ளர்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­ட­னர்.

ஆசி­யப் பிசி­பிக் பிரி­வின் இறு­திச் சுற்­றுக்கு டிரேஸ்­டு­கெ­தர் திட்­டத்­து­டன் தைவா­னைச் சேர்ந்த இரண்டு திட்­டங்­களும் இந்­தி­யா­வின் ஒரு திட்­ட­மும் தகுதி பெற்­றன.

குறிப்புச் சொற்கள்