காலாங் பாரு பாலத்துக்குக்கீழ் எலும்புக்கூடு: இன்னும் அடையாளம் தெரியவில்லை

காலாங் பாருவில் உள்ள பாலத்துக்கு அடியில் கண்டெக்கப்பட்ட எலும்புக்கூடு யாருடையது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டுக்குமேல் ஆகிறது. 

மரபணுச் சோதனைகள் நடத்தப்பட்டு, காணாமல்போன 18 பேருடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தும் எலும்புக்கூடு யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

மரணத்துக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மரண விசாரணை அதிகாரி இம்மாதம் 11ஆம் தேதி கூறினார்.

இறந்தவரின் அடையாளம் தெரியாவிடினும் அவர் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட ஆசிய ஆடவர் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

2020ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஆறு மாதங்களிலிருந்து ஓராண்டுக்கு முன்பு மரணம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று தெரியவந்தது.

பாலத்துக்கு அடியில் தளவாடப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மண்டை ஓட்டைப்  பார்த்து, நிலப் போக்குவரத்து ஆணையத்திற்குத் தெரியப்படுத்தினார். அதன் பின்னர் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!