வரவு செலவுத் திட்டம் 2022 பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் மாலை மூன்றரை மணிக்கு திட்டத்தை வெளியிடுவார்.
இணையம், வானொலி, தொலைக்காட்சி ஆகிய தளங்களில் அமைச்சரின் உரை நேரடியாக ஒளிப்பரப்படும்.
முழுமையான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதி அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதோடு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் அந்தத் தளங்கள் மூலம் தெரிவிக்கலாம்.
ரீச் (REACH), மக்கள் கழகம் போன்ற தளங்களும் பொதுமக்களின் கருத்துக்களைத் திரட்ட வரவு செலவுத் திட்டக் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யும்.