ஓய்வுக்கால மசே நிதி அடிப்படைத் தொகை ஆண்டுக்கு 3.5% உயரும்

பணி ஓய்­வுக்­கா­லத்­திற்­கான மத்­திய சேம நிதி அடிப்­ப­டைத் தொகை, 2023லிருந்து 2027வரை­யி­லான ஐந்­தாண்­டு­க­ளுக்கு, ஆண்­டுக்கு 3.5 விழுக்­காடு உயர்த்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த ஐந்­தாண்­டில் 55 வயது பூர்த்­தி­யா­கும் மசே நிதி கழக உறுப்­பி­னர்­க­ளுக்கு இது பொருந்­தும்.

அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைச் செல­வு­க­ளைக் கருத்­தில் கொண்டு, அவர்­க­ளது ஓய்­வுக்­கா­லத்­தில் அதி­க­மான மாதாந்­தர மசேநி வழங்­கு­தொ­கை­களை அளிக்­கும் பொருட்டு ஓய்­வுக்­கால அடிப்­ப­டைத் தொகை உயர்த்­தப்­ப­டு­வ­தாக நிதி அ­மைச்­சர் லாரன்ஸ் வோங் கூறி­னார்.

இந்த ஆண்டு 55 வயது நிறை­வ­டை­வோ­ருக்கு அடிப்­படை ஓய்­வூ­தி­யத் தொகை $96,000.

புதிய நடை­மு­றை­யின்­கீழ், முறையே 2023ல் அது $99,400, 2024ல் $102,900, 2025ல் $106,500, 2026ல் $110,200 மற்­றும் 2027ல் $114,100 ஆக இருக்­கும்.

2027ல் அவ்­வாறு தொகையை ஒதுக்­கி­வைக்­கும் 55 வயது உறுப்­பி­ன­ருக்கு, அவ­ரது 65ஆம் வய­தில் இருந்து, வாழ்­நாள் முழு­வ­தும், மாதம் ஆயி­ரம் வெள்ளி வழங்­கு­தொகை அளிக்­கப்­படும்.

இருப்­பி­னும், அடிப்­படை ஓய்­வூ­தி­யத் தொகையை ஒதுக்க இய­லாத உறுப்­பி­னர்­கள், மசே நிதிக் கணக்­கில் கூடு­தல்தொகை செலுத்­தத் தேவை­யில்லை என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

55 முதல் 70 வயது நிறை­வ­டைந்த ஊழி­யர்­க­ளுக்கு முத­லாளி­ களும், ஊழி­யர்­களும் செலுத்த வேண்­டிய மசேநி பங்­க­ளிப்பு விகி­த­மும் தொடர்ந்து உயர்த்­தப்­படும் என்று நிதி­ய­மைச்­சர் குறிப்­பிட்­டார்.

வய­தான ஊழி­யர்­க­ளுக்­கான முத்­த­ரப்­புப் பணிக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­க­ளின்­படி அது அமை­யும்.

ஏற்­கெ­னவே இந்த ஆண்டு மசே நிதி பங்­க­ளிப்பு உயர்த்­தப்­பட்­ட­தைச் சுட்­டிய அமைச்­சர், அதனை ஈடு­கட்ட முத­லா­ளி­

க­ளுக்கு ஓர் ஆண்டுக்கான அதி­க­ரிப்­பில் 50 விழுக்­காட்­டுத் தொகை நிதி­யு­தவி அளிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார். அடுத்த ஆண்­டும் அத்­த­கைய உதவி தொட­ரும் என்­றார் அவர்.

ஓய்­வுக்­கா­லத்­திற்­குத் தயா­ரா­கும் மூத்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குப் போதிய ஓய்­வூ­தி­யத் தொகை இருக்­கும் வகை­யில் அர­சாங்­கம் மேம்­பட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக நிதி­ அமைச்­சர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!