பாரந்தூக்கி அடியில் சிக்கி இந்திய ஊழியர் மரணம்

பாரந்தூக்கி அடியில் சிக்கிக்கொண்ட ஒரு 32 வயது இந்திய வெளிநாட்டு ஊழியர் மாண்டார்.

மண்டாய் குவாரியில் உள்ள ஒரு பணியிடத்தில் இந்தச் சம்பவம் நேற்று காலை நடந்தது. பாரந்தூக்கிக்குக் கீழே இருந்து சில கருவிகளை ஊழியர் எடுக்க முயன்றபோது, பாரந்தூக்கி திடீரென திரும்பியது. இதனால் ஆடவர் பாரந்தூக்கி அடியில் சிக்கிக்கொண்டார். 

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பணியிடத்தில் அனைத்து வேலைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சம்பவத்தையும் சேர்த்து இவ்வாண்டு 27 வேலையிட மரணங்கள் நடந்துள்ளன. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!