கெப்பல் ரோட்டில் விபத்து: 6 பேர் மருத்துவமனையில்

கெப்பல் ரோடு கண்டோன்ட்மென்ட் லிங் சாலை சந்திப்பில் நடந்த விபத்தில் ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் 50 வயதான கம்ஃபோர்ட் டெல்குரோவின் டாக்சி ஓட்டுநரும் ஒருவர். அவருக்கு காலிலும் நெஞ்சிலும் காயங்கள் ஏற்பட்டன. டாக்சியில் இருந்த நான்கு பயணிகளும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

விபத்து குறித்து காவல் துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் நேற்றிரவு சுமார் 8.15 மணியளவில் தகவல் கிடைத்தது.
ஒரு சாலை விளக்குக்கு அருகே ஒரு வெள்ளை நிற வாகனமும் டாக்சியும் இருக்கும் புகைப்படம் சமூகத் தளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

சாலை சந்திப்பில் டாக்சி நேராக சென்றுகொண்டிருந்ததாகவும், அதே சந்திப்பில் வலது பக்கமாக வளைந்த வாகனம் டாக்சியுடன் மோதியது. விபத்தின் தாக்கத்தால் டாக்சி ஒரு தடை மீது ஏறி சாலை விளக்கில் மோதியது. இந்த தகவலை கம்ஃபோர்ட் டெல்குரோ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

டாக்சி ஓட்டுநருக்கும் டாக்சியில் இருந்த பயணிகளுக்கும் உதவிவருவதாக கம்ஃபோர்ட் டெல்குரோ நிறுவனம் குறிப்பிட்டது.
காவல் துறையின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!