இந்திய சமூகத்தின் நிதித் தேவைகளுக்கு ஆதரவுக்கரம்

சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா) ஆண்­டு­தோ­றும் நடத்­தி­வ­ரும் ‘புரோ­ஜெக்ட் கிவ்’ நன்­கொ­டைத் திட்­டத்­திற்கு ஆத­ரவு அளிக்­கும் நோக்­கில் பல்­வேறு அமைப்­பு­களும் குழுக்­களும் முன்­வந்­துள்­ளன. முதல்­மு­றை­யாக 18 இந்­திய முஸ்­லிம் அமைப்­பு­களும் இணைந்து நிதி ஆதரவு வழங்கிக் கைகொடுத்துள்ளன.

இந்­திய முஸ்­லிம் பேரவை

சிண்­டா­வின் உன்­னத நோக்­கத்தை இந்­திய முஸ்­லிம் பேரவை அடை­யா­ளம் கண்டு, இந்­தி­யர்­க­ளுக்­கான நிதி, சமூக தேவை­க­ளுக்­குத் தாங்­களும் பங்­காற்ற வேண்­டு­மென்று, இந்­திய முஸ்­லிம் அமைப்­பு­க­ளி­ட­மிருந்து மொத்­தம் $10,858 பணத்­தைத் திரட்­டி­யுள்­ளது.

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் சனிக்­கி­ழமை மாலை நடந்­தே­றிய இந்த நிகழ்­வில், சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன், இந்­திய முஸ்­லிம் பேர­வை­யின் தலை­வர் முஹம்­மது பிலால், அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

ஒவ்­வோர் அமைப்­பின் நன்­கொடை­யை­யும் பெற்ற திரு அன்­பரசு ராஜேந்­தி­ரன், “நம் சமு­தா­யத்­தில் பல­ரும் வெவ்­வேறு சூழ­லில் வாழ்­கி­றார்­கள். இந்­திய முஸ்­லிம் அமைப்­பு­கள் எங்­க­ளுக்கு தரும் இந்த நன்­கொடை, மிக­வும் வர­வேற்­கத்­தக்­கது. ஒவ்­வோர் இந்­திய சிங்­கப்­பூ­ர­ரும் எவ்­வித சிக்­க­லி­லிருந்­தும் விடு­பட இந்த நிதி உத­வும். சமு­தா­யத்­திற்­குப் பங்­க­ளிக்­க­வேண்­டு­மென்ற அந்த எண்­ணத்­திற்கு நான் நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்,” என்­றார் அவர்.

“தீபா­வளி மட்­டு­மின்றி, குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்­தோர் விழாக்­கா­லத்தை மகிழ்ச்­சி­யா­கக் கொண்­டாட வேண்­டும் என்­ப­தற்கு எங்­கள் ஆத­ரவை நாங்­கள் வழங்­கி­யுள்­ளோம். அதோடு குறைந்த வரு­மா­னம் அல்­லது கல்­வி­யில் பின் தங்­கி­யுள்ள இந்­திய முஸ்­லிம் மாண­வர்­கள் சிண்­டாவை அணு­கு­வ­தற்கு அவர்­க­ளுக்­கும் சிண்­டா­வுக்­கும் இடையே ஒரு பால­மா­க­வும் செயல்­ப­டு­கி­றோம்,” என்று உறு­தி­ப­டக் கூறி­னார் திரு முஹம்­மது பிலால்.

வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு

சிண்­டா­வின் ‘புரோ­ஜெக்ட் கிவ்’ திட்­டத்­திற்­காக வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, குடி­யி­ருப்­பா­ளர்­கள், அடித்­தள தலை­வர்­கள், உறுப்­பினர்­கள் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து திரட்­டப்­பட்ட பணம் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று திட்­டத்­துக்­கான மையத்­தில் காசோ­லை­யாக வழங்­கப்­பட்­டது.

சமூக ஆலோ­ச­னைக் குழு­வின் தலை­வர் திரு சேமு­வல் டெங், வெஸ்ட் கோஸ்ட் இந்­தி­யர் நற்­பணி செயற்­கு­ழு­வின் தலை­வர் திரு நசீர் கனி­யு­டன் முனை­வர் டி. சந்­துரு இணைந்து சிண்­டா­வின் தலைமை அதி­காரி திரு அன்­ப­ர­சு­வி­டம் காசோ­லையை வழங்­கி­னர்.

அவர்­க­ளு­டன் வெஸ்ட் கோஸ்ட் இந்­தி­யர் நற்­பணி செயற்­குழு உறுப்­பி­னர்­கள், குடி­யி­ருப்­பா­ளர்­கள் என பதி­னைந்து பேர் இணைந்து புரோ­ஜெக்ட் கிவ் மையத்­துக்கு வருகை புரிந்­தி­ருந்­த­னர். ஏறத்­தாழ பத்­தாண்டு கால­மாக புரோ­ஜெக்ட் கிவ் திட்­டத்­திற்கு நன்­கொடை அளித்­து­வ­ரும் வெஸ்ட் கோஸ்ட் இந்­தி­யர் நற்­பணி செயற்­குழு, நோய்த்­தொற்­றுக்­குப் பின்­னர் நேர­டி­யாக மையத்­துக்கு வருகை புரிந்­தி­ருந்­தது.

“தீபா­வ­ளி­யின்­போது, வச­தி­குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டு­வதை முக்­கி­ய­மாகக் கரு­து­கி­றோம். குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோ­ருக்­கும் நிதி தேவைப்­ப­டு­வோ­ருக்­கும் இவ்­வாண்­டின் தீபா­வ­ளிக் கொண்­டாட்­டம் மன­நி­றை­வ­ளிப்­ப­தாக அமைய இது ஒரு வாய்ப்பு,” என்­றார் திரு நசீர் கனி, 64.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!