உன்னத மின்னிலக்கத் தீர்வுகளை அங்கீகரித்து விருதளிப்பு

முதி­யோர் தங்­க­ளின் உடல்­நி­லை­யைத் தாங்­களே கண்­கா­ணித்­துக்­கொள்ள வழி­காட்­டு­தல் பெறு­தல், சரக்கு வாகன விநி­யோ­கச் சேவை­களில் நீடித்த நிலைத்­தன்­மை­யைக் கூட்­டு­தல் முத­லிய சூழல்­களை நவீன மின்­னி­லக்­கத் தீர்­வு­கள் சாத்­தி­ய­மாக்கி உள்­ளன.

இத்­த­கைய மின்­னி­லக்­கத் தீர்வு­கள் மக்­க­ளை­யும் வர்த்­தகங்­க­ளை­யும் கடந்த ஆண்­டு­களாக சென்­ற­டைந்­துள்­ளன.

அவற்றை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் சிங்­கப்­பூர் கணி­னிச் சங்­கத்­தின் 55வது நிறைவு ஆண்­டுக் கொண்­டாட்­டம் அமைந்­தது.

இம்மாதம் 5ஆம் தேதி ஷங்­ரிலா ஹோட்­ட­லில் நடை­பெற்ற இக்­கொண்­டாட்­டத்­தில் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரும் உள்­துறை இரண்­டாம் அமைச்­சரு­மான ஜோச­ஃபின் டியோ­வும் உடன் பங்­கேற்­றார்.

கொவிட்-19 காலத்­தில் மருத்­து­வப் பரா­ம­ரிப்பு தொடர்­பில் ஏற்­பட்ட ஏரா­ள­மான சிக்­கல்­க­ளைக் கருத்­தில் கொண்டு வடி­வ­மைக்­கப்­பட்­டது, ‘ஹெல்த் டிஸ்­க­வரி+’ செயலி.

இத­னைத் தயா­ரித்த ‘ஒருங்­கிணைந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தக­வல் கட்­ட­மைப்­புக்கு’ (ஐஎச்­ஐ­எஸ்) மின்­னி­லக்­கச் சாத­னை­யாளர் விருது வழங்­கப்­பட்­டது.

பெரும்பாலும் 50 வய­துக்­கும் 65 வய­துக்­கும் இடைப்­பட்­டோர் பயன்­ப­டுத்­தும் இச்­செ­யலி, 2021ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

ரத்த அழுத்­தம், ரத்­தத்­தில் உள்ள சர்க்­கரை அளவு போன்ற உடல்­நல அம்­சங்­க­ளைக் கண்­காணிக்­கச் செயலி உத­வும். அபாய நிலையை இவை எட்­டும்­போது செயலி தாமா­கவே எச்­சரிக்கை விடுத்து மருத்­துவ உதவி நாட வகை­செய்­யும்.

இத­னால் முதி­ய­வர்­கள் வீட்­டில் இருந்­த­ப­டியே அவர்­க­ளின் உடல்­நி­லை­யைத் தாதி­யர் கண்­கா­ணிக்­க­லாம்.

10,000க்கும் மேற்­பட்ட நபர்­களை இச்­செ­யலி சென்­ற­டைந்­துள்­ளது.

“சுகா­தார ஊழி­யர்­க­ளின் பணியை எளி­தாக்­கு­வ­து­டன் உடல்­ந­லம் தொடர்­பான சுதந்­திரத்­தைப் பய­னா­ளர்­க­ளுக்கு வழங்க முற்­ப­டு­கிறது இச்­செ­யலி.

“சுகா­தார அமைப்­பு­க­ளின் ஆக்­கத்­தைக் கூட்­டு­வது பர­ப­ரப்­பான வாழ்­வி­யல் சூழ­லில் அவ­சி­ய­மாகி உள்­ளது,” என்­றார் ஐஎச்­ஐ­எஸ் நிறு­வ­னத்­தில் தலைமை மென்­பொ­ருள் பொறி­யா­ள­ராக உள்ள திரு யோகப்­பி­ர­காஷ் குமார், 34.

‘ஒப்ட்­இ­டி­ரக்’ எனும் மின்­னி­லக்­கத் தீர்வை வடி­வ­மைத்த பிஎஸ்ஏ நிறு­வ­ன­மும் மின்­னி­லக்­கச் சாத­னை­யா­ளர் விரு­தைப் பெற்­றது.

வளங்­க­ளைச் சரி­வர திட்­ட­மிடாத கார­ணத்­தால் விநி­யோகச் சரக்கு வாக­னம் ஒன்று ஒரு நாளில் குறைந்­த­பட்­சம் மூன்று முறை­யா­வது எதை­யும் ஏற்­றிச் செல்­லா­மல் வெறு­மனே பய­ணிக்­கிறது.

சுற்­றுச்­சூ­ழ­லின் நலன் கருதி இச்­சிக்­க­லைக் களைய ஒப்ட்­இ­டிரக் முற்­ப­டு­கிறது.

இடம்­பெ­யர்க்க வேண்­டிய சரக்­கு­க­ளைத் தேவைக்­கேற்ப பொருத்­த­மான லாரி­க­ளு­டன் இணைக்­கும் மின்­னி­லக்­கச் சேவையை ஒப்ட்­இ­டி­ரக் வழங்­கு­கிறது.

தேவை­யற்ற வாக­னப் பய­ணங்­கள் கரி­ய­மி­லத் தடத்தை அதி­கரிக்­கிறது என்று கூறிய பிஎஸ்ஏ நிறு­வ­னத்­தின் உத­வித் துணைத் தலை­வர் திரு ஸ்ரீராம் ராமா­னுஜம், இத்­து­றையை மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கு­வது அவ­சி­யம் என வலி­யு­றுத்­தி­னார். மேலும், ஒப்ட்­இ­டி­ரக் இது­வரை ஏறத்­தாழ 2,000 தேவை­யற்ற வாக­னப் பய­ணங்­க­ளைக் குறைத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லின் முக்­கிய அங்­க­மாக தொழில்­நுட்ப, தக­வல் தொடர்பு பிரி­வு­கள் விளங்­கு­கின்­றன என்று துணைப் பிர­த­மர் வோங் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!