செழிப்பூட்டும் ‘ரீட்! ஃபெஸ்ட்’ கண்காட்சி

ஆண்டுதோறும் நடக்கும் தேசிய நூலக வாரியத்தின் ‘ரீட்! ஃபெஸ்ட்’ விழாவை முன்னிட்டு ஃபுனான் கடைத்தொகுதியில் ‘பாப் அப்’ கண்காட்சி ஒன்றைத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த இலவச கண்காட்சி அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை இடம்பெறும்.

எட்டாவது முறையாக நடத்தப்படும் இந்த விழா ‘ஃபுளோரிஷ்’ என்ற கருப்பொருளைக் கொண்டது. அனைவரும் நூல்களை எடுத்துப் படிக்க ஊக்குவிப்பதோடு, வாசிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுவதும் இதன் நோக்கம்.

“நூல் வாசிப்பு ஒரு நல்ல பழக்கம். இதில் உலகளவில் சிங்கப்பூரர்கள் நல்ல தேர்ச்சி பெற்றாலும், வாசிப்பதைத் தொடர்ந்து ஊக்குவிக்க இது போன்ற நிகழ்ச்சிகள் தேவை,” என்று அமைச்சர் டியோ தமது உரையில் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் கருப்பொருளுக்கு ஏற்ப முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள 12 நூல்களைச் சித்திரிக்கும் வகையில் அஞ்சல் அட்டைகள் உள்ளூர் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அவர்களுக்குப் பிடித்த அட்டைகளை தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு கோப்புக்குள் சேர்க்கலாம். கண்காட்சியில் பொத்தான்களை அழுத்தி, கதையிலுள்ள சில வரிகளைக் கேட்டு மகிழ இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

‘ரீட்! ஃபெஸ்ட்’ விழாவில் தமிழ், சீன, மலாய், ஆங்கிலம் மொழிகளில் எழுபதிற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளன.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்: உண்மை மனிதர்களின் கதைகள்’ இவ்வாண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களில் ஒன்று. வழக்கறிஞர் சுமதியின் ‘ரௌத்திரம் பழகு’ என்ற கட்டுரைத் தொகுப்பும் இந்த விழாவிற்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

இவ்விரண்டு எழுத்தாளர்களுடன் இணையம் வழியாக உரையாடும் நிகழ்ச்சிகள் உட்பட மொத்தம் 12 தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறும். வழக்கறிஞர் சுமதியுடன் நடக்கும் கலந்துரையாடலை ஊடகத்துறையில் பணிபுரியும் திருவாட்டி ஜெயசுதா சமுத்திரன் வழிநடத்துவார்.

“திருவாட்டி சுமதி எதிர்கொண்ட வழக்குகளைப் பற்றி சிங்கப்பூர் வழக்கறிஞர் வடிவழகனுடன் கலந்துரையாடவிருக்கிறோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் அதிலிருந்து மீண்டு வரும் சிக்கல்களையும் ஆராயவிருக்கிறோம்,” என்றார் திருவாட்டி ஜெயசுதா.

எல்லா வயதினரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன் கூறினார்.

“தனிமனித, சமூக அறம் போன்ற கருப்பொருள்களைக் குறிப்பிட்டு இவ்விரண்டு நூல்களைத் தேர்ந்தெடுத்தோம். நமது தாய்மொழியைக் கொண்டாடவும் எல்லா வயதினரையும் பேச வைக்கவும் இந்நிகழ்ச்சிகள் ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்,” என்று திரு அழகிய பாண்டியன் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

மூன்றாண்டு காலமாக நூலகத்தின் தொண்டுழியராக இருக்கும் 23 வயது ஹர்ஷினி கணபதி தொடர்ந்து இவ்வாண்டும் இணையம் மூலம் தொண்டூழியம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

“ஒரு தமிழ் ஆசிரியராக வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளேன். என் மொழிவளத்தை வளர்க்க உதவிய நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க நல்ல வாய்ப்பாக இது அமைந்துள்ளது,” என்றார் குமாரி ஹர்ஷினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!