கடந்த ஆண்டு சராசரி மாத குடும்ப வருமானம் $10,000 க்கு மேல்

சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு சராசரி மாத குடும்ப வருமானம் 10,000 வெள்ளிக்கு மேல் என்று சிங்கப்பூர் புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சராசரி மாத குடும்ப வருமானம் 10,000 வெள்ளிக்கு மேல் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு சராசரி மாத குடும்ப வருமானம் 10,869 வெள்ளி என்று தெரிவிக்கப்பட்டது. அது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 விழுக்காடு அதிகம். 2022ஆம் ஆண்டு சராசரி மாத குடும்ப வருமானம் 10,099 வெள்ளியாக இருந்தது.

பணவீக்கத்தை கொண்டு மாத குடும்ப வருமானத்தை ஒப்பிட்டால் அதன் வளர்ச்சி 2.8 விழுக்காடு உயர்ந்துள்ளதாக புள்ளியியல் துறை குறிப்பிட்டது.

2023ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் ஒப்பிடுகையில் சராசரி மாத குடும்ப வருமானத்தின் வளர்ச்சி வேகமும் கூடியுள்ளது.

இருப்பினும் வீட்டில் உள்ள தனி நபர்களின் மாத வருமான வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு அது 3,287 வெள்ளியாக இருந்தது. 2023ஆம் ஆண்டு அது 3,500 வெள்ளியாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 6.5 விழுக்காடு வளர்ச்சி.

2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் ஒப்பிடுகையில் தனி நபர்களின் மாத வருமான வளர்ச்சி 8.6 விழுக்காடாக இருந்தது.

குடும்பங்களுக்கு இடையிலான வருமான வேற்றுமையும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறுகி வருகிறது.

அரசாங்க வரி, பரிமாற்றங்களை கணக்கிடாது, 2023ஆம் ஆண்டு குடும்பங்களுக்கு இடையிலான வருமான வேற்றுமை 0.433ஆக உள்ளது. அது 2022ஆம் ஆண்டு 0.437ஆக இருந்தது.

அதிகரித்து வரும் விலைவாசி, 9 விழுக்காடாக மாறியுள்ள பொருள் சேவை வரி போன்றவற்றை சமாளிக்க சிங்கப்பூர் அரசாங்கம் பல ஆதரவு திட்டங்களை அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!