எதன் மீதும் அதிக நம்பிக்கையோ அதிக அவநம்பிக்கையோ கொள்வதைத் தவிர்க்க வேண்டும்: அதிபர் தர்மன்

வளர்ச்சியை விரும்பும் வர்த்தகத் தலைவர்கள், உலகில் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கும் நிலையிலும் வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்.

அதற்கு அவர்கள் முயற்சிகளைப் பன்முகப்படுத்துவதுடன், எதன் மீதும் மிக அதிக நம்பிக்கையோ மிக அதிக அவநம்பிக்கையோ கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.

சீனா உட்பட உலகச் சந்தைகள் மீதான கண்ணோட்டத்தின் தொடர்பில் இத்தகைய போக்கை அவர் சுட்டினார்.

சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபையில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிபர் உரையாற்றினார்.

சிங்கப்பூர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளப்பத்துக்கும் அனைத்துலகச் சந்தை முக்கிய வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.

இருந்தபோதும், உலகச் சந்தைகளை சவால் மிக்கவை என்றோ வாய்ப்புகள் நிறைந்தவை என்றோ எளிதாக வகைப்படுத்துவதை வர்த்தகங்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மேலும் நிச்சயமற்ற, முன்னுரைக்க முடியாக சூழல் நிலவும் வேளையில் இது முக்கியம் என்றார் அதிபர் தர்மன்.

எடுத்துக்காட்டாக, சீனச் சந்தையின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தன்மை குறித்தும் அதன் வலிமை குறித்தும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் கருத்துகள் முழுமையான சூழலைக் கருத்தில் கொள்ளவில்லை. சவால்கள், வலிமைகள் இரண்டுமே ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியும். அடுத்து வரும் சிறிது காலத்திற்கு இத்தகைய நிலை நிலவக்கூடும் என்று அதிபர் தமது உரையில் குறிப்பிட்டார்.

சீனச் சந்தை எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது. அவற்றிலிருந்து மீண்டுவர சிறிது காலம் பிடிக்கலாம் என்று கூறிய அதிபர், சீனாவிடம் சில அடிப்படை வலிமைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை என்றார்.

ஆசியா வாய்ப்புகள் நிறைந்த வட்டாரம். சிங்கப்பூர் அதிர்ஷ்டவசமாக ஆசியாவில் இடம்பெற்றுள்ளது என்று அதிபர் கூறினார்.

சீனா, தென்கிழக்காசியா, இந்தியா ஆகியவற்றைச் சேர்த்துக் கணக்கிட்டால், உலகளாவிய வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு இந்த வட்டாரத்தைச் சேரும் என்றார் திரு தர்மன்.

அதிகரிக்கும் தேவை, குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமுள்ள துறைகளில் வர்த்தகத் தலைவர்கள் வாய்ப்புகளை அடையாளம்காண வேண்டும். அதேநேரம் ஒரே இடத்தில் கவனம் செலுத்தாமல் பல தரப்புகளிலும் விரிவாக்கம் காண்பதும் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!