நீர் வடிகட்டும் சாதனம் விற்கும் நிறுவனம், இயக்குநர்களுக்கு நியாயமற்ற நடைமுறை குறித்து எச்சரிக்கை

வடிகட்டப்பட்ட நீரில் உடல்நல நன்மைகள் கிடைக்கும் என்று தவறான கருத்தைச் சொல்வது போன்ற நியாயமற்ற நடைமுறைகளுக்காக, நீர் வடிகட்டும் நிறுவனமான பியூரெக்சிஜனுக்கும் அதன் இயக்குநர்களுக்கும் சிங்கப்பூர் வணிகப் போட்டித் தன்மை பயனீட்டாளர் ஆணையம் (சிசிஎஸ்) மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிசிசிஎஸ் மார்ச் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், நீர் வடிகட்டும் சாதனங்களை விநியோகிப்பவர்களின் சந்தைப்படுத்தல் நடைமுறைகள், அங்கீகாரம் வழங்குதல், சான்று வழங்கும் முறை, உடல்நல அனுகூலம் குறித்த கூற்றுகளை மறுஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியான அந்தத் தொழில்துறை சந்தை குறித்த கண்காணிப்பின் ஒரு பகுதியாக அது இடம்பெறுவதாக அது கூறியது.

பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தகம்) சட்டத்தின் (சிபிஎஃப்டிஏ) கீழ், பியூரெக்சிஜன் எனும் நீர் விநியோகக் கருவி, கார நீர் (அல்கலைன்) வடிகட்டும் அமைப்புகள், பராமரிப்பு சாதனத் தொகுப்புகளை வழங்கும் நிறுவனத்தை ஆணையம் விசாரணை செய்தது.

அந்த நிறுவனம் 2021 செப்டம்பருக்கும் 2023 நவம்பருக்கும் இடையில் ‘நியாயமற்ற நடைமுறைகளில்’ ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

அந்த காலகட்டத்தில், நிறுவனம் அதன் இணையத்தளத்திலும், சமூக ஊடகப் பக்கங்களிலும் அல்கலைன் அல்லது வடிகட்டிய நீர், எலும்புத் தேய்மான நோய், அமிலப் பிரச்சினை, ரத்த அழுத்த நிலைகள், நீரிழிவு ஆகியவற்றைத் தடுக்க உதவும் என்பது போன்ற உடல்நல நன்மைகள் குறித்த தவறான கருத்துகளைக் கூறியிருந்தது.

மேலும், அதன் விற்பனைக் கையேடுகளில், அதன் நீர் வடிகட்டிகள் சோதனை அமைப்புகளால் சோதிக்கப்பட்டதாக நிறுவனம் பொய்யாகக் கூறியது என்றும் ஆணையம்கூறியது.

நேரடி விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் செயலாக்கக் கட்டணம், பராமரிப்புச் சேவை தொகுப்புக்காக செலுத்தப்பட்ட தொகைகள் திருப்பித் தரப்படாது என்று பியூரெக்சிஜன் தனது சேவை ஒப்பந்தங்களில் குறிப்பிட்டது என்றும் ஆனால் அத்தகைய ஒப்பந்தங்களைச் சட்டபூர்வமாக ரத்து செய்து, பணத்தைத் திரும்பப் பெறலாம் என்பதைக் கூறவில்லை என்றும் ஆணைக்குழு மேலும் கூறியது.

விசாரணைக்கு பின்னர் பியூரெக்சிஜன் நிறுவனம் தனது வணிக நடைமுறைகளை மாற்றியுள்ளது, விற்பனைக் கையேட்டிலிருந்த தவறான கூற்றுகள், ஆல்கலைன் அல்லது வடிகட்டிய நீரின் உடல்நல நன்மைகள் பற்றி தவறான வாக்கியங்கள் ஆகியவற்றை அகற்றியதுடன் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய நீர் வடிகட்டிகளையும் வழங்கியுள்ளது.

நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதை நிறுத்தவும், பயனீட்டாளரின் புகார்களைத் தீர்க்க சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்துடன் (கேஸ்) முழுமையாக ஒத்துழைக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அத்துடன், அனைத்து சந்தைப்படுத்தல் முறைகளும் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி இருப்பதை உறுதி செய்வதற்கான கொள்கையை உருவாக்கவும், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் நியாயமற்ற நடைமுறையாகக் கருதப்படக்கூடிய நடத்தைகளை நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்யவும் அது உடன்பட்டுள்ளது.

பியூரெக்சிஜன் இனிமேலும் நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடாது என்று அந்நிறுவனத்தின் இயக்குநர்களான திரு ஹெங் வெய் ஹ்வீ, திரு டான் டோங் மிங் ஆகியோரும் உறுதியளித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!