சிறப்புத் தேவையுடையோரை உள்ளடக்கும் கலை, விளையாட்டுத் துறைகள்

சிங்கப்பூரின் கலை நிலையங்கள், அண்மைய ஆண்டுகளில் அனைவரையும் உள்ளடக்கும் முயற்சிகளை அதிகம் எடுத்து வருகின்றன.

மாறுபட்ட தேவையுடையோருக்கென அவை ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளன. உதாரணமாக, தொடர்புத்திறன் குறைபாடு இருப்போருக்கான இருவழித் தொடர்பு (இன்டரேக்டிவ்) நிகழ்ச்சிகளை எஸ்பிளனேட் படைத்திருக்கிறது.

முதன்முறையாக 2016ஆம் ஆண்டில் எஸ்பிளனேட் அத்தகைய நிகழ்ச்சியை வழங்கியது. தொடர்புத்திறன் குறைபாடு உள்ள சிறுவர்களுக்காக அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புத்திறன் குறைபாடு உள்ள சிறுவர்கள் நிகழ்ச்சியில் நடித்தவர்களின் கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதிலளித்ததாகப் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

எஸ்பிளனேட் அரங்கம் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் அங்கு பல விதிமுறைகள் உள்ளன என்றும் ஒரு மனப்போக்கு உள்ளது. தொடர்புத்திறன் குறைபாடு உள்ள சிறுவர்களுக்கான நிகழ்ச்சி அதைப் பொய்யாக்கும் வண்ணம் அமைந்தது.

சிறப்புத் தேவையுடையோரைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்படும் அத்தகைய படைப்புகளை மேலும் வழங்குவது எஸ்பிளனேட்டின் இலக்கு என்று அதன் தடையற்ற அணுகல்தன்மைப் பணிக் குழு துணைத் தலைவர் ஜினா கோ தெரிவித்தார். 2027ஆம் ஆண்டுக்குள் அத்தகைய மேலும் ஒரு நிகழ்ச்சியையாவது வழங்க எஸ்பிளனேட் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

எஸ்பிளனேட், 2021ஆம் அண்டில் சிறப்புத் தேவையுடையோருக்கென நுழைவுச்சீட்டுகளில் விலைக் கழிவு வழங்கியதாக திருவாட்டி கோ குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விலைக் கழிவைப் பயன்படுத்தி நுழைவுச்சீட்டுகளை வாங்கியோரின் எண்ணிக்கை 33 விழுக்காடு கூடியதாக அவர் தெரிவித்தார்.

எஸ்பிளனேட்டைப் போல் கேட்வே ஆர்ட்ஸ், சிங்கப்பூர் தியேட்டர் கம்பெனி போன்ற கலை நிலையங்களிலும் சிறப்புத் தேவையுடையோரைக் கருத்தில்கொண்டு படைப்புகளும் நிகழ்ச்சிகளும் வழங்கப்படுகின்றன. சிறப்புத் தேவையுடையோரைக் கொண்ட படைப்புகளும் உண்டு.

அனைவரையும் உள்ளடக்கும் நடிகர் திட்டம் (இன்குளூசிவ் ஆக்டிங் புரோகிராம்) 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் உறுப்பினர்களில் ஒருவரான 26 வயது பிரித்விராஜ் “பிஜே” குமார் பாசு, சிறிதளவு தொடர்புத் திறன் குறைபாடு உள்ளவர்.

இப்போது சிங்கப்பூர் தியேட்டர் கம்பனியின் நாடகங்களில் நடிக்கும் அவர், “நான் அனுபவிப்பதை மற்ற சிலரும் அனுபவித்து வருகின்றனர். என்னைப் போலவே அவர்களும் சமூக அளவில் ஒன்றிணைய ஆசைப்படுகின்றனர்,” என்று கூறினார்.

விளையாட்டிலும் அனைவரையும் உள்ளடக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக, எல்லா ஆக்டிவ்எஸ்ஜி உடற்பயிற்சிக் கூடங்களிலும் 2026ஆம் ஆண்டுக்குள் அனைவரையும் உள்ளடக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது.

விளையாட்டில் அனைவரையும் உள்ளடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2015லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலத்தில் விளையாட்டில் ஈடுபட்ட சிறப்புத் தேவையுடையோரின் எண்ணிக்கை 28 விழுக்காட்டிலிருந்து 54 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!