எனக்குச் சோறு போடும் ஈரு

சனிக்கிழமை ஒரு சாமானியர்

ஒரே ஒருமுறை ரூ.500 முதல் போட்டு ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக ரூ.500 சம்­பா­திக்­கி­றேன் என்­கி­றார் சாலையோர முத­லாளி சிங்­கா­ர­வேலு, 68.

“என்­னு­டைய முத­லீடே ஒரு ரம்­பம், ஓர் உளி­தான். பர­ப­ரப்­பான கடைத்­தெரு ஓர­மா­கத்­தான் எனது தொழிற்­சாலை. போவோர் வரு­வோ­ர்­தான் எனது சந்தை.

“கடந்த 30 ஆண்டுகால­மாக இந்­தத் தொழிலை நடத்தி வரு­கி­றேன்,” என்று ஈருளி தயா­ரித்து விற்­கும் திரு சிங்­கா­ர­வேலு சொன்­ன­தைக் கேட்டு கொஞ்­சம் வியப்­பா­கத்­தான் இருந்­தது.

மயி­லா­டு­து­றை­யில் பிறந்து, வளர்ந்து, காத்­தாயி, 60, என்ற உற­வுக்­கா­ரப் பெண்ணை மணந்து, நான்கு ஆண் பிள்­ளை­கள், இரண்டு பெண் பிள்­ளை­க­ளைப் பெற்­றெ­டுத்து, எல்­லா­ருக்­கும் மண­மு­டித்து வெளி­யூர்­க­ளுக்கு அனுப்­பி­விட்டு, தன் மனை­வி­யு­டன் ஒரு குடிசை வீட்­டில் வசிக்­கும் இந்த முத­லாளி, “பெண்­க­ளின் தலை­யில் வாழும் ஈரும் பேனும்­தான் எங்­க­ளுக்­குச் சோறு போடு­கின்­றன,” என்­றார்.

திரு சிங்­கா­ர­வேலு தம்­பதியர் படிக்­கா­த­வர்­கள். மயி­லாடுதுறை­யில் பொது மருத்­து­வ­மனை சாலை ஓர­மாக மண்தரை­யில், மர நிழ­லில் இத்­தம்­ப­தி­யைக் காண­லாம்.

‘ஈர் உருவி’ என்­பதே மருவி 'ஈருளி' என்று வழங்­கப்­ப­டு­கிறது. திரு­மண சீர்­வ­ரி­சை­யில்­கூட ஈருளி இடம்­பெற்று இருக்­கும். ஈரு­ளிக்கு நறு­வலி என்ற மரக்­கட்­டை­தான் மிக­வும் சிறந்­தது.

“ஆனால், நறு­வலி மரம் இப்­போது கிடைப்­ப­தில்லை. ஆகை­யால், பூவ­ரசு, தேக்கு, வேம்பு, சவுக்கு மரக்­கட்­டை­களில் இ­ருந்து ஈருளி செய்­கி­றோம்.

“மர­வா­டி­களில் (மரக்கடைகளில்) ஒதுக்­கப்­படும் இத்­த­கைய கட்­டை­களை எடுத்து வரு­வேன். அவற்றை உளி­யால் நானும் மனை­வி­யும் ஈருளி வடி­வத்­திற்­குச் சீவிக்­கொள்­வோம்.

பிறகு ரம்­பத்­தால் அறுத்து ஏழு பற்­கள், ஒன்­பது பற்­க­ள் கொண்ட ஈரு­ளி­க­ளைச் செய்­வோம். உப்­புத்­தா­ளைப் போட்டு தேய்த்து வழ­வ­ழப்­பாக்கி விற்­போம். ஏழு பல் ஈருளி ரூ.50க்கும் ஒன்­பது பல் பெரிய ஈரு­ளியை ரூ.100க்கும் விற்­கி­றோம்.

“ஒரு நாளைக்கு சரா­சரி­யாக 10 ஈருளி விற்­கும். திரு­விழாக் காலம் என்­றால் ரூ.1,500க்குக் கூட விற்­ப­னை­யா­கும். மழைக்­கா­லங்­களில் பல இடங்­க­ளுக்­கும் சென்று ஈருளி விற்­பேன். சில கடை­களில் கேட்­டா­லும் கொடுப்­பேன். ஈரு­ளி­யின் அடிப்­ப­குதி தலை­முடி சிக்­கலை எடுக்க உத­வும்,” என்று சிங்­காரவேலு தம்­பதியர் கூறி­னர்.

நான் அவர்­க­ளு­டன் கிட்டத்தட்ட அரைமணி நேரம் இருந்­தேன். அப்­போது இரண்டு பேர் ஈருளி வாங்க வந்­தார்­கள். ஒரு­வர் ரூ.50 கொடுத்து சிறிய ஈருளி வாங்­கி­னார். மற்­றொ­ரு­வர் வாங்­கா­மல் சென்­று­விட்­டார்.

'ஈரும் பேனும் வர இதுதான் காரணம்'

“பொது­வாக பெண்­க­ளுக்­குத் தலை­யில் ஈரும் பேனும் வரு­வ­தற்­குக் கார­ணம் பள்­ளிக்­கூ­டங்­களில் படிக்கும் மாணவிகளுடன் அவர்­கள் நெருங்கிப் பழ­கு­வ­து­தான். ஒரு­வ­ரின் சீப்பு, தொப்பியை மற்­றொ­ரு­வர் பயன்­ப­டுத்­தும்­போதும் கட்­டிப்­பிடித்து விளை­யா­டும்­போதும் பேன் பர­வ வாய்ப்­புண்டு.

“சிலர் தலை­மு­டி­யைச் சரி­யா­கப் பரா­ம­ரிக்­கா­மல் சிக்­குப்­பி­டித்­துப் போகும் அள­வுக்கு வைத்­திருப்­பார்­கள். அத்­த­கைய நிலை­யி­லும் பேன் பெரு­கு­வ­துண்டு.

“காய்ச்­சல் கார­ண­மாக சில மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­யில் பல நாள்­கள் இருக்­கும் நோயாளி­க­ளின் தலை­யில் பேன் பெரு­கி­வி­டும். மருத்­து­வ­மனைக்கு வந்து செல்­வோ­ரில் சிலர்­கூட என்­னி­டம் இருந்து ஈருளி வாங்­கிச் செல்­வ­துண்டு.

“இப்­போது தலை­மு­டி­யைச் சுத்­தம் செய்ய நவீன பொருள்­கள் எவ்­வ­ளவோ வந்­து­விட்­டன. இருந்­தா­லும்­கூட எங்­கள் ஈரு­ளிக்கு ஏதோ கொஞ்­சம் தேவை இருந்து­கொண்­டு­தான் இருக்­கிறது.

“எங்­க­ளு­டைய எஞ்­சிய கால­மும் இதி­லேயே கழிந்­து­வி­டும்,” என்­கிறார் திரு சிங்­கா­ர­வேலு.

“வய­லில் விளை­யும் நெல் சோறு போடு­வ­தைப்­போல் தலை­யில் விளை­யும் ஈரும் பேனும்­தான் எங்­க­ளுக்­குச் சோறு போடு­கின்றன.

“தலைமுடி­யைச் சரி­யாகப் பரா­ம­ரிக்­கா­விட்­டால் ஈரும் பேனும் புழுத்­து­வி­டும். உட­லில் உள்ள ரத்­தத்தை உறிஞ்சி பேன் கொழுத்துவிடும். அரிப்­பாய் அரிக்­கும்.

“ஏழு பாய்­க­ளைத் தாண்­டி­யும் பேன் பர­வும். மூட்­டைப்பூச்­சிக்­குப் பயந்து வீட்­டைக் கொளுத்­திய கதை­யாக ஈரையும் பேனையும் வளர விட்­டு­விட்­டால் தலையை மொட்டை அடிக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­வி­டும்.

“அப்­படி ஒரு­நிலை வரா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும். அதை­யும் மீறி ஈரும் பேனும் வந்­து­விட்­டால் இருக்­கவே இருக்­கிறது எங்­கள் ஈருளி,” என சிரித்­துக்­கொண்டே கூறி­னார் திரு­மதி காத்­தாயி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!