தொழிலாளர்களின் தோழர்களாக தோள்கொடுக்கும் தலைவர்கள்

வேக­மாக மாறி­வ­ரும் உல­கப் பொரு­ளி­யல், அர­சி­யல் சூழ­லில், சம்­ப­ளம், வேலைச்­சூ­ழல், ஓய்­வூதி­யம் ஆகி­யவை தொடர்­பில் உல­கின் பல நாடு­க­ளி­லும் தொழிற்­சங்­கங்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­களுக்­கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு­கிறது.

ஆனால், சிங்­கப்­பூ­ரின் அணுகு­முறை வேறாக இருக்கிறது. சவால்­களை எதிர்­கொள்ள அர­சாங்­கத்­து­ட­னும் முத­லா­ளி­க­ளு­ட­னும் கைகோத்­துச் செயல்­பட்டு வரு­கிறது சிங்­கப்­பூ­ரின் தொழி­லாளர் இயக்­கம்.

1961ஆம் ஆண்டு தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) உரு­வாக்­கப்­பட்­ட­போது சிங்­கப்­பூ­ரில் வேலை­நி­றுத்­தங்­களும் தொழி­லா­ளர் போராட்­டங்­களும் அதி­க­மாக இருந்­தன. ஆயி­னும், 1969ல் இடம்­பெற்ற நவீ­ன­ம­ய­மா­தல் மாநாட்­டிற்­குப் பின் நிலைமை மாறி, அர­சாங்­கத்­து­டன் ஒத்­து­ழைக்­கும் போக்கை என்­டி­யுசி கைக்­கொண்­டது.

தொழிற்­சங்­கத் தலை­வர்­கள் என்­ப­வர்­கள் யார், அவர்­க­ளது பணி எத்­த­கை­யது என்­ப­தைச் சிந்­திக்க வைத்த தரு­ண­மாக அது அமைந்­தது.

மோதல்­க­ளை­யும் கல­கங்­களை­யும் ஊக்­கு­வித்­துக் குளிர்­கா­யும் போலி­யான தலை­மைத்­துவத்தை விடுத்து, நேர்­மை­யு­டன் தங்­க­ளது பணி­யை­ச் செய்த தலை­வர்­க­ளால் ஊழி­ய­ரணி மேம்­பட்டு, இந்­நாட்­டின் வளர்ச்­சியை ஆத­ரித்து வந்­தது.

படிப்­ப­டி­யான ஊதிய உயர்­வுத் திட்­டம் மூல­மாக குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு உயர்ந்­து­வரும் வாழ்க்­கைச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க என்­டி­யுசி உத­வு­கிறது.

தற்­கா­லி­கப் பணி­யா­ளர்­களுக்கு அதி­கப் பாது­காப்­பை­யும் மூத்த ஊழி­யர்­க­ளின் ஓய்­வூ­திய வய­தை­யும் மறு­வே­லை­யில் அம­ரும் வய­தை­யும் உயர்த்­த­வும் என்­டி­யுசி செயல்­பட்­டது.

இவை­யெல்­லாம் போக, சக ஊழி­யர்­க­ளின் நலன்­க­ளைப் பேணு­வ­தற்­காக சம்­பள உயர்வு, நிம்­ம­தி­யான வேலைச்­சூ­ழல் போன்­ற­வற்­றுக்­கா­கப் பாடு­படும் பலர் நம்­மி­டையே உள்­ள­னர். அவர்­களில் நால்­வ­ரைத் தமிழ் முரசு நேர்­காணல் செய்தது.

அந்­நால்­வ­ரும் என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங்­கி­ட­மி­ருந்து நாளை மே தின விருது பெற­வுள்­ள­னர். சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு, கண்­காட்சி மையத்­தில் இடம்­பெ­றும் விழா­வில் 128 தனி­ம­னி­தர்­க­ளுக்­கும் 44 அமைப்­பு­க­ளுக்­கும் விருது வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

அண்ணன் காட்டிய வழியில் வெற்றிநடைபோடும் தம்பி

தமது முப்­பத்து இரண்­டா­வது வய­தில் தொழிற்­சங்­கத்­தில் சேர்ந்­த­போது தொழிற்­சங்­க­வா­தி­கள் முரட்­டுத்­த­ன­மா­கப் போரா­டு­ப­வர்­கள் என்று திரு பிர­கா­சம் முனி­சாமி எண்­ணி­யி­ருந்­தார்.

ஆயி­னும், கடல் மற்­றும் கப்­பல் கட்­டு­தல் துறை­க­ளுக்­கான தொழிற்­சங்­கத்­தில் இரு­பத்­தேழு ஆண்­டு­களாக ஆற்­றிய சேவை திரு பிரகாசத்தைப் பக்­கு­வப்­ப­டுத்­தி­யது.

பதி­னொரு வய­தில் தாயாரை இழந்து, ஐந்து ஆண்­பிள்­ளை­கள், ஒரு பெண்­பிள்ளை எனப் பெரிய குடும்­பத்­தில் வளர்ந்த இவரது கர­டு­மு­ர­டான வாழ்க்கை அனு­ப­வம், சக ஊழி­யர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைப் புரிந்­து­கொள்­ளத் தேவை­யான மனப்­பக்­கு­வத்­தைக் கொடுத்­தது.

‘ஓ’ நிலை பயின்­ற­பின் ‘வெல்­டிங்’ எனப்­படும் பற்­ற­வைப்­புத் தொழி­லைச் செய்து வந்­தார் திரு பிர­கா­சம்.

அத்தொழிலில் சிறந்து விளங்கிய இவர், மூன்றாண்­டு­க­ளுக்­குப் பிறகு பதவி உயர்­வும் சம்­பள உயர்­வும் பெற்­றார்.

“கடு­மை­யாக உழைக்­கும் என் அண்­ணன் எனக்கு முன்­மா­திரி. அவ­ரைப் பின்­பற்­றியே நானும் கடு­மை­யாக உழைக்­கி­றேன்,” என்­றார் இப்­போது 59 வய­தா­கும் திரு பிர­கா­சம்.

திறனை மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென விரும்­பிய திரு பிர­கா­சம் 1996ஆம் ஆண்­டில் தொழிற்­சங்­கத்­தில் சேர்ந்­தார். சக ஊழி­யர்­கள் தொடக்­கப்­பள்ளி மட்­டும் படித்­தி­ருந்த நிலை­யில் இவ­ருக்கு ‘ஓ’ நிலை படிப்பு இருந்­த­தால் தொழிற்­சங்­கத்­தில் தலை­மைப் பொறுப்பு ஏற்­கும்­படி சங்­கத்­தி­ன­ரால் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார்.

நல்ல தொழிற்­சங்­கத் தலை­வ­ராகத் தம்மை உரு­வாக்­கி­யது என்­டி­யு­சியே என்­றார் திரு பிர­கா­சம்.

“என்­டி­யுசி தொடர்ந்து பயிற்­சி­களும் திறன்­மேம்­பாடு வகுப்­பு­க­ளை­யும் வழங்கி வரு­கிறது. ஆர்­வ­முள்­ளோ­ருக்கு என்­டி­யுசி வழங்­கும் வாய்ப்­பு­கள் அவர்­களே வியக்­கும் வகை­யில் அவர்­களை வெகு­வாக உரு­மாற்­று­கின்­றன,” என்று இவர் குறிப்­பிட்­டார்.

2013 முதல் 2017 வரை தொழிற்­சங்­கத்­தின் துணைத் தலை­வ­ரா­கச் செய­லாற்­றிய திரு பிர­கா­சம், பல­ரை­யும் தொழிற்­சங்­கத்­தில் சேர ஊக்­கு­வித்­தார்; பின்­னர் 2017ஆம் ஆண்­டில் உத­வித் தலை­மைச் செய­லா­ள­ரா­கப் பொறுப்­பேற்­றார்.

“கொவிட்-19 கால­கட்­டத்­தில் ஊழி­யர்­கள் சிர­மப்­பட்­ட­போது தொழிற்­சங்­கம் பெரி­தும் கைகொ­டுத்­தது,” என்­றார் திரு பிர­கா­சம்.

ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­களை நிறு­வ­னம் எடுத்­த­போது வேலை இழந்­த­வர்­க­ளுக்­கான இழப்­பீட்­டைக் கூடு­மா­ன­வரை பெற முயன்­ற­து­டன் அவர்­க­ளுக்­குப் புதிய வேலை­க­ளைத் தேட­வும் தொழிற்­சங்­கம் மூலமாக இவர் கைகொ­டுத்­தார்.

தொழிற்­சங்­கத்­தின் முன்­னைய தலை­வர் ஸ்டி­ஃபன் சுங்­கைத் தமது முன்­மா­தி­ரி­யாக திரு பிர­கா­சம் கருது­கி­றார்.

“பொது­வாக இந்­தி­யர்­கள் தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் மட்­டு­மின்றி வேலை இடங்­க­ளி­லும் எளி­தில் உணர்ச்­சி­வ­யப்­ப­டு­வர்­கள் என்­பது என் கருத்து. நானும் எளி­தில் மகிழ்ச்­சி­யை­யும் கோபத்­தை­யும் வெளிப்­படுத்­து­வேன். என்­னைத் தொழில்­முறைப்­ப­டுத்தி எனக்­குச் சரி­யான விழு­மி­யங்­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்­தது திரு சுங்­தான்,” என்­றார் இவர்.

தொழி­லா­ளர்­க­ளின் நலன், தொழில்­ந­ல­னைச் சார்ந்­துள்­ள­தைப் புரிந்­து­கொண்­ட­தால் திரு பிர­கா­சம் முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வக் கூட்­ட­மைப்­பில் சுமு­க­மா­கச் செயல்­பட முடிந்­தது.

வேலை­யிட நிர்­வா­கி­கள், மனி­த­வளப் பிரி­வி­னர், அர­சாங்க அதி­காரி­கள், அர­சாங்க ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தை­கள் இந்­தப் பங்­கா­ளித்­து­வத்தை மேம்­படுத்­தும் என்­பது இவ­ரது கருத்து.

‘தொழி­லா­ளர்­களின் தோழன்’ என்ற நட்­சத்­திர விருது வழங்கி சிறப்பிக்கப்பட இருக்கிறார் திரு பிரகாசம்.

தொய்வின்றித் தொண்டாற்ற பேரூக்கம் அளிக்கும் விருது

பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேல் பாது­கா­வல் துறை­யில் பணி­யாற்றி உள்ள திரு­வாட்டி சிவ­மணி தியா­க­ரா­ஜன், 48, மன உறு­தி­யா­லும் தளரா உழைப்­பாலும் வாழ்­நாள் கற்­றல்­மீது கொண்­டுள்ள நம்­பிக்­கை­யி­னா­லும் வேலை­யில் படிப்­ப­டி­யாக உயர்ந்­தி­ருக்­கி­றார்.

“ஃபோகஸ் செக்­யூ­ரிட்டி சர்­வி­சஸ்’ நிறு­வ­னத்­தில் தலை­மைப் பாது­காவல் அதி­கா­ரி­யாகப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி சிவ­மணி, தம் தந்­தை­யார் திரு நாக­லிங்­கம் சிவா­வின் ஊக்­கு­விப்­பால் அத்­து­றை­யில் சேர்ந்­தார்.

பாது­காவல் அதி­கா­ரி­களுக்­கான தொழிற்­சங்­கத்­தைச் சேர்ந்­த­வ­ரான திரு நாகலிங்கம் சிவா, அத்­து­றை­யில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த தம் மகள் திருவாட்டி சிவ­ம­ணியை ஊக்­கு­வித்­தார்.

“ஊழி­யர்­க­ளின் நல­னுக்­காகத் தொழிற்­சங்­கங்­கள் பாடு­படு­வதைக் காணும்­போது அவற்­றின்­ மீதான நன்­ம­திப்பு உயர்­கிறது. எனவே, நான் என் தந்­தை­யா­ரின் அறி­வு­ரைப்­படி நடந்­து­கொண்­டேன்,” என்­றார் திரு­வாட்டி சிவ­மணி.

முன்பு 12 மணி நேரத்­திற்­கு­ மேல் வேலை செய்ய வேண்­டி­ இருந்த பாது­கா­வ­லர்­கள் இப்­போது அவ்­வ­ளவு நேரம் பணி­புரிய வேண்­டி­ய­தில்லை.

அத்­து­டன், அவர்­க­ளுக்­குக் கூடு­த­லான ஓய்­வு­நேரம், கூடு­த­லான ஞாயிற்­றுக்­கி­ழமை விடுப்­பு­கள், திறன் மேம்­பாட்டு வாய்ப்­பு­கள் ஆகி­யவை கிடைக்­கின்­றன.

இந்த மாற்­றங்­க­ளுக்­கா­கத் தாம் தொழிற்­சங்­கங்­க­ளு­டன் இணைந்து பாடு­பட வேண்­டி­ இ­ருந்­த­தா­கத் திரு­வாட்டி சிவ­மணி குறிப்­பிட்­டார்.

கடந்த 2013ஆம் ஆண்­டில் பாது­காவல் அதி­கா­ரி­க­ளுக்­கான தொழிற்­சங்­கத்­தில் சேர்ந்த திரு­வாட்டி சிவ­மணி, அத்­து­றையை பெண்­க­ளுக்கு ஏற்ற துறை­யாக மாற்ற முயற்சி எடுத்­தி­ருக்­கி­றார்.

“பாது­கா­வல் துறை­யில் தொழில் முறை­மை­யி­லும் வேலை ஏற்­பா­டு­கள் தொடர்­பான நீக்­குப்­போக்­கி­லும் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றத்­தால் அத்­து­றை­யில் முன்­பை­விட இப்­போது பெண்­கள் அதிக அள­வில் சேர்­கின்­ற­னர்,” என்று அவர் கூறி­னார்.

ஆண்­கள் அதி­க­மாக உள்ள இத்­து­றை­யில் ஆணா­திக்­கம் குறித்த கவலை பெண்­க­ளுக்கு ஏற்­ப­டு­வது இயல்பே என்ற திரு­வாட்டி சிவ­மணி, பெண்­கள் தங்­க­ளுக்­கா­கக் குரல்­கொ­டுப்­பது முக்­கி­யம் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

திறன்­மேம்­பாட்டு வகுப்­பு­களுக்கு அடிக்­கடி செல்­லும் இவர், சக ஊழி­யர்­க­ளை­யும் அவ்­வாறு செய்ய ஊக்­கு­விக்­கி­றார்.

பாது­காவல் துறை­யின் உரு­மாற்­றங்­களை உற்று கவ­னித்து அதற்­கேற்ற திறன் மேம்­பா­டு­களை சக ஊழி­யர்­க­ளுக்கு திரு­வாட்டி சிவ­மணி பரிந்­து­ரைப்­பார்.

சென்ற ஆண்டு என்­டி­யுசி பெண்­க­ளுக்­கான தலை­மைத்­து­வத் திட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­தன்­மூ­லம், பிறர் முன்­னி­லை­யில் தம் எண்­ணங்­களைப் பகிர்ந்து­கொள்­ளும் வாய்ப்பை திரு­வாட்டி சிவ­மணி பெற்­றார்.

“சோத­னைக் காலத்­தில்­தான் நம் பல­வீ­னங்­கள் என்ன என்­பதை அறிய நேர்­வோம். அத­னால் துவண்­டு­வி­டா­மல் பல­வீ­னங்­களை பலங்­க­ளாக மாற்­றிக்­கொள்ள முயல வேண்­டும் என்­ப­தை­க் கற்­றுக்­கொண்­டேன்,” என்றார் இவர்.

தாம் பெற­வி­ருக்­கும் சிறந்த ‘முன்­மா­திரி ஊழி­யர்’ விருது பேரூக்­கம் அளிப்­ப­தாக உள்­ளது என்ற திரு­வாட்டி சிவ­மணி, தொய்­வின்­றித் தமது தொண்­டைத் தொட­ரப்­போ­வ­தா­கக் கூறி­னார்.

 

கடந்தகாலப் பின்னடைவால் வருங்கால வெற்றிக்குத் தடையில்லை

சிங்­டெல் நிறு­வ­னத்­தில் வாடிக்­கை­யா­ளர் சேவை அதி­கா­ரி­யாகப் பணி­யாற்­றும் திரு­வாட்டி பர்­வீன் கமா­லு­தீன், 40, பிறர் பேசு­வ­தைப் பொறு­மை­யா­கக் கேட்­கும் பண்­பை­யும் பல­த­ரப்­பட்ட பிரச்­சி­னை­க­ளைக் கையா­ளும் திற­னை­யும் சக ஊழி­யர்­களின் நல­னுக்­கா­கப் பயன்­படுத்தி வரு­கி­றார்.

ஒட்­டு­மொத்த ஒப்­பந்­தப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போதும் ஆண்­டு­தோ­றும் இடம்­பெ­றும் சம்­பள உயர்வு, போனஸ் கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போ­தும் தொழி­லா­ளர்­க­ளின் சம்­பள உயர்­வுக்­காக ஒலிக்­கும் குரல் திரு­வாட்டி பர்­வீ­னின் குர­லாக இருக்­கும்.

சிங்­கப்­பூர் தொலைத்­தொ­டர்பு ஊழி­யர்­க­ளின் தொழிற்­சங்­கத்­தில் புதி­தா­கச் சேர்ந்­த­போது ஆர்­வத்தினால் மட்டுமே சேர்ந்­த­தா­கக் கூறி­னார் இவர். காலப்­போக்­கில் தொழிற்­சங்­கப் பணி இவ­ருக்­குப் பிடித்­துப்­போ­னது.

“சம்­பள விவ­கா­ரங்­கள் மட்­டு­மன்றி, தொழி­லா­ளர்­க­ளின் வேலை-வாழ்க்­கைச் சம­நி­லைக்­கும் பங்­காற்றி வரு­கி­றேன். இது என் மனத்­திற்கு நெருக்­க­மான பணி­யா­கி­விட்­டது,” என்­கி­றார் திரு­வாட்டி பர்­வீன்.

தொழிற்­சங்­கக் கிளை உறுப்­பி­னர், வாடிக்­கை­யா­ளர் சேவைக் கிளை­யின் உத­விச் செய­லா­ளர் உள்­ளிட்ட சில பொறுப்­பு­களை வகித்த இவர், இப்­போது உத­விப் பொரு­ளா­ள­ராக இருக்­கி­றார்.

தொழி­லா­ளர் சங்­கப் பணி­களைப் பெரு­மி­தத்­து­டன் செய்­யும் திரு­வாட்டி பர்­வீன், முன்­னைய தலை­வர்­க­ளின் அனு­பவங்கள், அறி­வு­ரை­க­ளி­லி­ருந்­து கற்­றுக்­கொள்­வ­தா­கக் கூறி­னார்.

“எத்­தனை இடர்ப்­பா­டு­கள் வந்­தா­லும் தொடர்ந்து போரா­டும் மனப்­பான்மை தேவை. கடந்­த­கா­லப் பின்­ன­டை­வு­கள் வருங்­கால வெற்­றி­க­ளுக்­குக் குறுக்கே நிற்­காது என்­ப­தை­யும் தெரிந்­து­கொள்­ள­வேண்­டும்,” என்­கி­றார் இவர்.

விவ­ரங்­க­ளைச் சரி­யா­கத் தெரிந்­து­கொள்­வ­தும் சக ஊழி­யர்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்­ப­தும் தமது பொறுப்­புக்­குத் தேவைப்­படும் முக்­கி­யத் திறன்­க­ளாக திரு­வாட்டி பர்­வீன் கரு­து­கி­றார்.

செயற்கை நுண்­ண­றிவு, மின்­னி­லக்­க­ம­ய­ம் போன்­ற­வற்­றால் தொலைத்­தொ­டர்­புத் துறை­யில் உரு­மா­றி­வ­ரும் சூழ­லில், வாழ்­நாள் கற்­றல் அவ­சி­ய­மா­கி­விட்­ட­தா­க­வும் இவர் சொல்­கி­றார்.

இவர் ‘தொழி­லா­ளர்­க­ளின் தோழன்’ விருது பெறவுள்ளார்.

 

முடிவெடுக்க உதவும் மூன்று குடும்பங்கள்

‘ஏ’ நிலை கல்­வித் தகுதி கொண்­டுள்ள திரு விக்­னேஷா ராம் நாயுடு கரு­ணா­க­ரன், 46, சொத்­துச் ­சந்­தைத் துறை­யி­லி­ருந்து வெளி­யேறி பின்­னர் துப்­பு­ர­வுத் துறை­யில் பணி­யாற்­றி­னார். இவர் தேர்வு செய்த பாதை மாறு­பட்­ட­தாக இருந்­தா­லும் அத்­து­றை­யில் படிப்­ப­டி­யாக ஏற்­றம் கண்­டார்.

தற்­போது தொழிற்­சங்­கத் தலை­வ­ராக இருந்து பிற­ருக்­குத் தொண்­டாற்­றும் திரு விக்­னேஷா, பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளுக்­கான சங்­கத்­தால் சிறந்த முன்­மா­திரி ஊழி­ய­ரா­கப் முன்­மொ­ழி­யப்­பட்­டார்.

சிறு­வ­ய­தில் படிப்­பின்­மீது இவர் பெரி­தாக ஈடு­பாடு காட்­ட­வில்லை. இருப்­பி­னும், வாழ்க்­கைத்­தொ­ழி­லில் முன்­னேற விரும்­பிய இவர், தமது திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள முடி­வு­செய்­தார்.

ஓங் டெங் சியோங் தொழி­லா­ளர் தலை­மைத்­துவ நிலை­யத்­தில் பல்­வேறு வகுப்­பு­களில் சேர்ந்து வேலை நிய­ம­னச் சட்­டம் போன்ற வேலை­சார்ந்த விதி­மு­றை­களை கற்­றுத் தேர்ந்­தார் திரு விக்­னேஷா.

பிறர் முன்­னி­லை­யில் உரை­யாற்று­வ­தி­லும் தொழில் வளர்ச்­சி­யி­லும் ஆர்­வம் காட்­டிய திரு விக்­னே­ஷா­வைத் தொழிற்­சங்­கத்­தில் சேரும்­படி அச்சங்­கத்­தினர் அழைத்­த­னர்.

அங்கு தம்­மால் தனித்­து­வ­மான முறை­யில் பங்­க­ளிக்க முடி­யும் என்­பதை உணர்ந்த திரு விக்­னேஷா, உடற்­குறை உள்­ளோரை வேலை­யில் அமர்த்­து­வ­தற்­கும் அவர்­க­ளுக்­கான வச­தி­க­ளைக் கூடு­த­லாக ஏற்­படுத்­து­வ­தற்­கும் தமது பொறுப்­பைப் பயன்­ப­டுத்­தி­னார்.

சம­ரச நடு­வ­ரா­க­வும் சேவை­யாற்­றும் திரு விக்­னேஷா, தொழி­லா­ளர்­கள், நிறு­வ­னங்­களுக்கு இடை­யே­யான பூசல்­களைத் தீர்க்க உத­வு­கி­றார்.

‘முன்­மா­திரி ஊழி­யர்’ விருதால் தாம் பேரு­வகை அடை­வ­தா­கக் கூறும் இவர், அவ்­வி­ரு­தைத் தனது உழைப்­பிற்­கும் தான் பட்ட சிர­மங்­களுக்­கும் கிடைத்த வெகு­மதி­யா­கக் கரு­து­கி­றார்.

பெற்­றோ­ர், மனை­வி­யின் ஆத­ர­வு­டன், பணியிடம், தொழிற்­சங்­கம் என்ற மற்ற இரு குடும்பங்களும் தமது வெற்­றிக்­கு வித்­திட்­ட­தா­கத் திரு விக்­னேஷா குறிப்­பிட்­டார்.

“என்னுடைய இந்த மூன்று குடும்­பங்­களும் நல்ல முடி­வு­களை எடுப்பதற்கு எனக்கு வழி­காட்­டு­கின்­றன,” என்­கிறார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!