விதவிதமான கேக்குகள் விற்பனை

பிறந்தநாள், திருமணக் கொண்டாட்டங்களில் கேக்குகளுக்குத் தனி இடம் உண்டு, அதற்கு அதிக முக்கியத்துவமும் தரப்படும்.

தங்களுக்கும் விருந்துக்கு வருபவர்களுக்கும் பிடித்தமான வகையில் கேக்குகள் இருக்க வேண்டும் என்பதில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அதனைக் கருத்தில்கொண்டு கேக் செய்யும் கடைகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளன.

அதுவும் இந்தியர்களுக்குப் பிடித்தமான உணவுகளான பிரியாணி, கோழிச்சோறு, மீ கோரெங், நாசி லெமாக் போன்றவற்றை கேக்காக மாற்றி கடைகள் விற்பனை செய்கின்றன.

பிரியாணி கேக்:

‘குவீன் பி’ கேக் கடையில் அதிகம் விற்கப்படும் கேக்குகளில் பிரியாணி கேக்கும் ஒன்று. கிட்டத்தட்ட 9 அங்குல பிரியாணி கேக்கின் விலை 89.90 வெள்ளி. 

அந்த கேக்கில் தந்தூரி சிக்கன், பட்டர் சிக்கன், மசாலா மட்டன் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. கேக்கிற்கு அழகூட்டும் விதமாகவும் சுவையை அதிகரிக்கும் விதமாகவும் கறி, அப்பளம், தயிருடன் வெங்காயம், வெள்ளரிக்காயும் சேர்க்கப்பட்டுள்ளன. 

அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சைவ பிரியாணி கேக்கும் விற்கப்படுகிறது. அதில் பன்னீர் கட்டிகள், தோ ஃபூ சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விலை 59.90 வெள்ளி. 

நாசி லெமாக் கேக்: 

சமையலில் அதிகம் ஆர்வம் கொண்ட 65 வயது ரோசலிண்ட் வான் புதிதாக கேக் செய்ய வேண்டும் என்று எண்ணி நாசி லெமாக் கேக்கைச் செய்துள்ளார்.

ஆம்லெட், ஓட்டா, இறால், அரிசிகொண்டு ஓர் அடுக்கையும் அதற்குமேல் மீ கோரிங்கையும் சேர்த்து கேக்காக வடிமைத்துள்ளார்.

கேக்கின் அளவுக்கு ஏற்றாற்போல் கேக்கின் விலையை நிர்ணயிக்கிறார் விற்கிறார் ரோசலிண்ட். குறைந்தபட்சமாக 98 வெள்ளிக்கும் அதிகபட்சமாக 118 வெள்ளிக்கும் இவ்வகை கேக் விற்கப்படுகிறது.  

கேக்கிற்கு அழகுசேர்க்கும் விதமாக அதன் மேற்புறத்தில் கருவாடு, கடலைகள் தூவப்பட்டுள்ளன. கூடுதலாக கேக்கைச்சுற்றி கோழித்துண்டுகளும் காய்கறிகளும் வைக்கப்பட்டுள்ளன. 

கோழிச்சோறு கேக்:

கோழிச்சோற்றில் கேக் செய்தால் என்ன என்று வித்தியாசமான முறையில் யோசித்து வெற்றிபெற்றுள்ளனர் நிக்கோலஸ் ஆங், டிரிசியா டிஹின்.

அவர்கள் அந்த கேக்கை 50 வெள்ளிக்கு விற்கின்றனர். 

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அதில் கடல் உணவுகள், விதவிதமான கோழிவகைகள், சாந்துகள் சேர்த்து விற்கின்றனர் அவர்கள். இணையத்தில் கோழிச்சோறு கேக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தற்போது வாரம் 10 முதல் 15 கோழிச்சோறு கேக்குகள் விற்பனையாவதாக நிக்கோலஸ் கூறினார். 

மீ கோரிங் கேக்:

இந்தோனீசிய சமையல் முறையில் மீ கோரிங் கேக் செய்யப்பட்டு அதன்மேல் ஆம்லெட், மீன் துண்டு, நூடல்ஸ் வைக்கப்படுகின்றன. 

சிறிய கேக்கின் விலை 39 வெள்ளி. கேக்கிற்கு அழகு செய்ய வேண்டுமானால் நான்கு முதல் பத்து வெள்ளி வரை விலை அதிகரிக்கப்படும். 

இந்த கேக்குகள் 2020ஆம் ஆண்டு டியான் லின் அறிமுகப்படுத்தினார். அதன்பின் அது பிரபலமானது. 

கேக் உலகில் புத்தாக்கம்:

மக்களை ஈர்க்கும் விதமாக கேக் செய்வோர், கைப்பைகள், கார்கள், பழங்கள் போன்ற வித்தியாசமான வடிவங்களிலும் கேக் செய்து வருகின்றனர். அவற்றை இணையம்வழி விளம்பரம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.  

கேக்குகள் வித்தியாசமான முறையில் வந்தாலும் அவற்றின் விலையும் அதிகமாகத்தான் உள்ளது. ஒரு சிறிய கைப்பை கேக்கின் விலை 48 வெள்ளி என்று கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் புதுப்புது அனுபவங்களைப் பெற விலையைப்பற்றி கவலையில்லாமல் சுவைக்கவும் ரசிக்கவும் தொடங்கிவிட்டனர். கேக் உலகில் புத்தாக்கம் வந்தது உணவுப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!