ஐபிஎல் ஏலம் நடத்த துபாய் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம்

துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2024 இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் வரலாறு படைக்கப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடந்திருப்பது இதுவே முதன்முறை.

ஏற்பாட்டாளர்கள் ஏலத்தை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது.

இந்தியாவில் இப்போது திருமணப் பருவம் என்பதால் ஏலத்தை நடத்த ஹோட்டல்களை முன்பதிவு செய்ய ஏற்பாட்டாளர்களுக்குச் சிரமம் ஏற்பட்டதே இதற்குக் காரணம்.

“இது திருமணப் பருவம் என்பதால் ஹோட்டல் கிடைப்பது சிரமமாக இருந்தது. எனவேதான், துபாயில் ஏலத்தை நடத்த நாங்கள் முடிவெடுத்தோம்,” என்று டெக்கன் ஹெரால்ட் செய்தி நிறுவனத்திடம் ஐபிஎல் அதிகாரி ஒருவர் கூறினார்.

2024 ஐபிஎல் ஏலம் நடந்த இடம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

[ο]‘கோக்க-கோலா அரினா’, துபாயின் ‘சிட்டி வாக் ஏரியா’வில் அமைந்துள்ள பன்னோக்கு கட்டடமாகும். 2019ல் திறக்கப்பட்ட அக்கட்டடத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 17,000 பேர் அமரலாம்.

[ο]மத்திய கிழக்கில் முழு குளிர்சாதன வசதியுடைய முதலாவதும் ஆகப்பெரிய கட்டடம் என கோக்க-கோலா அரினா அறியப்படுகிறது.

[ο]2022 உலக டென்னிஸ் லீக் போட்டியும் நட்புமுறை டென்னிஸ் ஆட்டங்களும் இந்த இடத்தில்தான் நடைபெற்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!