கோடிகளை அள்ளிய ஆஸ்திரேலிய வீரர்கள்

கோடிகளை அள்ளிய ஆஸ்திரேலிய வீரர்கள்

1 mins read
fbe42727-cf97-4534-ac14-eb3ca17aeb6a
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். - படம்: ஏஎஃப்பி

துபாய்: துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 33, புதிய சாதனை படைத்துள்ளார்.

கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல்லுக்கு ஸ்டார்க் திரும்புகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அவர் முன்னதாக இடம்பெற்றிருந்தார்.

ஸ்டார்க்கிற்கு முன்பு ஆஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் ஆக விலையுயர்ந்த வீரர் சாதனையை ஒரு மணி நேரம் தக்கவைத்திருந்தார். தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ.20.5 கோடிக்கு வாங்கியது.

ஐபிஎல் ஏலத்தில் கம்மின்ஸ் குறிப்பிடத்தக்க தொகையைக் கோரியிருப்பது இது முதன்முறையன்று. 2020க்கு முன்பு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.5 கோடிக்கு அவரை வாங்கியிருந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கிண்ண இறுதிச்சுற்று நாயகன் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ், நியூசிலாந்தைச் சேர்ந்த டேரில் மிட்செல்லை ரூ14 கோடிக்கு வாங்கியது.

குறிப்புச் சொற்கள்