You are here

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் - கில்கிறிஸ்ட்

மெல்பர்ன்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரை வெல்ல உடல்நிலையை விட மனநிலை முக்கியமானது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட்காப்பாளர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரைச் சிறப்பாக முடித்துக்கொண்டு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண் டிலும் தொடர்களை இழந்து உள்ளது. விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி வெளி நாட்டு மண்ணில் சாதிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் இரண் டில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்னும் ஆஸ்தி ரேலியத் தொடர் மட்டுமே மீதம் உள்ளது.

பத்து ஆட்டங்களுக்குப் பின் கோலடித்த ஜிரூ; நெதர்லாந்தை வீழ்த்தியது பிரான்ஸ்

பாரிஸ்: அண்மையில் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டி களில் வெற்றி மகுடம் சூடிய பிரான்ஸ் காற்பந்து அணியில் இடம்பெற்றிருந்தபோதும் அந்தத் தொடரில் ஒரு கோல்கூட போடாத தால் பெரும் ஏமாற்றமடைந்தார் தாக்குதல் வீரரான ஒலிவியே ஜிரூ. அனைத்துலக அளவில் கடை சியாகத் தான் ஆடிய பத்து ஆட் டங்களில் ஜிரூ ஒரு கோல்கூட அடிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் நெதர்லாந்து அணிக்கு எதிரான நேஷன்ஸ் கிண்ணப் போட்டியில் அற்புதமான கோலை அடித்ததன் மூலம் ஒரு வழியாக அவரது கோல் ஏக்கம் தீர்ந்தது.

‘ஃபெடரருக்கும் நடாலுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்’

நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னாள் முதல்நிலை ஆட் டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச், 31, அமெரிக்கப் பொது விருதை மூன்றாவது முறை யாகக் கைப்பற்றியுள்ளார். எட்டாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த ஜோக்கோவிச் 6-3, 7-6, 6-3 என நேர் செட்களில் அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வெற்றி கொண்டார். 2009ல் அமெரிக்க ஓப்பன் பட்டம் வென்ற டெல் போட்ரோ, கிராண்ட் ஸ்லாம் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு முன் னேறியது இதுவே இரண்டாவது முறை. இதையடுத்து, ஜோக்கோவிச் வென்றுள்ள கிராண்ட் ஸ்லாம் பட்டங் களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது.

செரீனாவுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறியதற்காக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படுவதாக அந்நாட்டு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்கப் பொது விருதுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாக்காவிடம் 6=2, 6=4 என நேர் செட்களில் செரீனா தோற்றுப் போனார். இதனால் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி சாதிக்கும் நினைப்பில் இருந்த அவரது கனவு சுக்குநூறானது. போட்டியின்போது பயிற்றுவிப்பாளரிடம் செரீனா ஆலோசனை பெற்றதாகக் கூறி, அவரை எச்சரிக்கும்விதமாக புள்ளியைக் குறைத்தார் நடுவர் கார்லோஸ் ராமோஸ்.

சதமடித்து சாதனையுடன் விடைபெறும் குக்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தொடக்கப் பந்தடிப்பாளரு மான அலெஸ்டர் குக், தமது கடைசி இன்னிங்சில் சதமடித்து, சாதனை வீரராக அனைத்துலகப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார். லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்திய அணிக்கு எதிரான கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குமுன், அந்தப் போட்டி யுடன் அனைத்துலகப் போட்டிகளிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக அறிவித்தார் 33 வயதான குக். டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங் களைக் கடந்த ஒரே வீரராக இருந்தும் முதல் நான்கு போட்டிகளிலும் அவரால் ஒர் அரை சதத்தைக்கூட அடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடும் நெருக்கடியில் இருந்தார்.

மனந்தளராமல் போராடியும் தோற்ற இங்கிலாந்து

லண்டன்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 2=1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரையிறுதி வரை சென்று பாராட்டுகளைப் பெற்றது இங்கிலாந்து.

மகுடம் சூடிய முதல் ஜப்பானிய வீராங்கனை

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியில் நவோமி ஒசாக்கா கிண்ணம் வென்றுள்ளார். இந்தப் பட்டத்தை வென்ற முதல் ஜப்பானிய வீராங் கனை எனும் பெருமை அவரைச் சேரும். நேற்று அதிகாலை நடை பெற்ற இறுதிச் சுற்றில் அமெரிக் காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சுடன் அவர் மோதினார். இதில் 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார் 20 வயது ஒசாக்கா.

பெல்ஜியம் கோல் மழை; சரணடைந்த ஸ்காட்லாந்து

கிளாஸ்கோ: அனைத்துலக நட்புமுறை காற்பந்துப் போட்டியில் பெல்ஜியம் 4=0 எனும் கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை நேற்று பந்தாடியது. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பெல்ஜியத்தின் அதிரடித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்காட்லாந்து திக்கு முக்காடியது. ஆட்டத்தின் 28வது நிமிடத் திலேயே ஸ்காட்லாந்தின் தற் காப்பில் நேர்ந்த குளறுபடியைப் பயன்படுத்தி பெல்ஜியத்தின் முதல் கோலைப் போட்டார் ரொமேலு லுக்காகு. இடைவேளையின்போது 1=0 எனும் கோல் கணக்கில் பெல்ஜியம் முன்னிலை வகித்தது.

இறுதிச் சுற்றில் மோதும் ஜோக்கோவிச், டெல் போட்ரோ

நியூயார்க்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெ ரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான இறுதிச் சுற்றுக்கு செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் அர்ஜெண்டினாவின் டெல் போட் ரோவும் தகுதி பெற்றுள்ளனர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றி யாளரும் உலகின் முதல் நிலை வீரருமான ஸ்பெயினின் ரஃப யேல் நடாலும் மூன்றாம் நிலை வீரரும் 2009ஆம் ஆண்டு வெற்றியாளருமான டெல்போட் ரோவும் மோதினர்.

ஃபாண்டி: பயமில்லை என நிரூபித்துள்ளோம்

நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் மொரீ‌ஷியஸ் குழுவுடன் 1=1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் சமநிலை கண்டது. இந்த ஆட்டம் பீஷான் விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் மொரீ‌ஷியஸ் கோல் போட்டு விளையாட்டரங்கத்தில் கூடி இருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இடைவேளையின்போது 1=0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் பின்தங்கியிருந்தது. பிற்பாதியில் அனுபவமிக்க வீரர்களான ஷாரில் இஷாக், கைரூல் அம்ரி, பைஹாக்கி கைஸான் ஆகியோரைக் களமிறக்கினார் சிங்கப்பூர் குழுவின் இடைக்காலப் பயிற்று விப்பாளர் ஃபாண்டி அகமது. இது ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.

Pages