தொல்பொருள்

ஆப்கானிஸ்தானில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் புல்டோசரால் அழிக்கப்பட்டதாக சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
திண்டுக்கல்: பழனியில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாகை: திருக்கோவிலுார் பகுதியில் 9ஆம் நுாற்றாண்டு சிற்பத் தூண் (படம்) கண்டெடுக்கப்பட்டது. அத்தூணின் நான்கு பக்கங்களிலும் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. தமிழகச் சிற்பக் கலைக்கு துவக்க காலத்தில் இந்தத் தூண் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறினர். மேலும், இது சிவ வழிபாட்டிற்கு உரியது என்றும் தெரிவித்தனர்.
புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தையொட்டி, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலப் பொருள்களையும் சிற்பங்களையும் திருப்பித் தர அமெரிக்கா முடிவு செய்தது.
தி.மலை: கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரிய தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்லவர் கால கல்வெட்டுகளும் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.