பராமரிப்பு

முன்பு மனைவியுடனும் இரு மகன்களுடனும் ஒன்றுகூடி, புத்தாடை அணிந்து, தீபாவளியைப் புன்னகையோடு கொண்டாடிய தருணங்களை நினைவுகூர்ந்து கலங்கினார் வைத்தியலிங்கம் வீரப்பன், 84.
பக்கவாதம் திடீரென ஏற்பட்டதால் திரு பன்னீர்செல்வத்திற்கு உடலின் இடது பக்கம் முழுமையாகச் செயலிழந்து போனது. 15 ஆண்டுகளாகப் பாதுகாப்புத் துறையில் மேலாளர் பணியில் இருந்த அவர் அதைத் தொடரமுடியாமல் போனது. 56 வயது திரு பன்னீர்செல்வம் ராஜமாணிக்கத்தின் வாழ்வில் எதிர்பாராத இடியாக அது அமைந்தது.
திரையுலக நட்சத்திரத் தம்பதியர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து சருமப் பராமரிப்பு வர்த்தக உலகுக்குள் தமது புதிய ‘9ஸ்கின்’ (9SKIN) வர்த்தகம் மூலம் சிங்கப்பூரின் உள்ளூர் தொழில்முனைவரான 43 வயது டெய்சி மோர்கன் அடியெடுத்து வைக்கவுள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் காண்கின்றன ‘9ஸ்கின்’ பொருள்கள்.  
முதுமையில் வரும் ஞாபக மறதி நோய் (டிமென்ஷியா) உடையோரைப் பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் (74%), தங்களுக்கு உள்ள பொறுப்புகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்துறை திருவாட்டி சசி பிரியா ரவியை 30 ஆண்டுகளாய் அரவணைத்திருந்தது. துணை நோயாளி பராமரிப்பாளராக தாதிகளுடனும் மருத்துவர்களுடனும் அணுக்கமாய் பணிபுரிந்த அவர், நேரடி மருத்துவ பராமரிப்பில் முழுநேரமாக இறங்கியதோ கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான்.