வரவுசெலவுத் திட்டம்

வரவுசெலவுத் திட்டம் 2024ல் இடம்பெற்றுள்ள ஆதரவுத் திட்டங்கள், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் நோக்கிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
கொள்ளைநோய்க்குப் பிந்திய உலகம் ஆபத்தானது மட்டுமல்ல, கணிக்க முடியாததாக உள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் $131.4 பில்லியன் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளதால் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
வெவ்வேறு கருத்துகள் உள்ளோருக்கு இடம் தந்து அவர்களது சொற்களுக்கு மதிப்பளித்து அதே நேரத்தில் பொதுவான நோக்கத்துடன் அனைவரையும் முன்னேற்றும் பணி, அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் சவாலாக உள்ளது என்று தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார அமைச்சுக்களின் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
பெரும் சத்தத்தால் அண்டை வீட்டாருக்கிடையே ஏற்படும் சண்டைகளைக் கையாள புதிய சட்டங்களை முன்வைப்பதற்கான திட்டங்கள், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவக்கூடிய கிருமிகளின் தொடர்பில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடு போன்றவை செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.