கொவிட்-19

நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியியல் வல்லுநரான பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமா, 2024ஆம் ஆண்டுக்கான லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசை வென்றுள்ளதாக ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களைக் காட்டிலும் 65 வயதுக்கும் அதிகமான மூத்தோரின் உடலில் செலுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் வீரியம் விரைவில் குறைகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு சிறப்பாகச் செயல்பட்டதற்கு சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட்டின் திறன்வாய்ந்த தலைமைத்துவம் முக்கியக் காரணம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
கொவிட்-19 காலகட்டத்தில் அரசாங்கம் அறிமுகம் செய்த வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் $8,901.90 மதிப்புள்ள மானியங்களைப் பெற முயன்றதாகச் சந்தேதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏமாற்றியதாகவும் பொய்க் கையெழுத்து இட்டதாகவும் 65 வயது ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் டாங் கொங் சூங், ஏப்ரல் 1ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.