பிரதமர்

பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.
பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ர உட்பட தாயகத்தைவிட்டு தப்பிச்சென்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்போம் எனத் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.
புதுடெல்லி: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பூசலால் உலக நாடுகளிடையே போர் குறித்த கவலை நிலவும் வேளையில், இந்தியர்களின் பாதுகாப்புக்குத் தாங்கள் முன்னுரிமை தருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.
புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.