கல்வி

பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த தகவல்களை சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் பகிர்ந்துகொள்ளலாம் என்று எஸ்டோனியாவின் கல்வி, ஆய்வு அமைச்சர் திருவாட்டி கிறிஸ்டினா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
குவெஸோன் சிட்டி (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் அதை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். குறிப்பிடும்படியாக, மாணவர்களில் 69 விழுக்காட்டினர் அமெரிக்காவில் படிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
வர்த்தகங்களும் தனிநபர்களும் மின்னிலக்கமயமாவதற்கு உதவ வலுவான கொள்கைகளும் கல்வியும் அவசியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஏப்ரல் 16ஆம் தேதி கூறியுள்ளார்.
ஆசியான் அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளின் மின்னிலக்கக் கல்வியறிவு, விழிப்புணர்வு, தயார்நிலை விகிதங்கள் குறித்த ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.