துணைப் பிரதமர்

பல்கலைக்கழகங்களில் பயிலும் இளம் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் தங்களின் கல்விச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் வகையில் புதிய உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏப்ரல் 26ஆம் தேதி தெரிவித்தார்.
பேங்காக்: தாய்லாந்தின் நிதியமைச்சராக எரிசக்தி நிறுவன முன்னாள் நிர்வாகி பிச்சை சுன்ஹவஜிரா பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தாய்லாந்தின் அதிகாரபூர்வ அரசிதழ் ஏப்ரல் 28ஆம் தேதி அறிவித்துள்ளது.
பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பதவியேற்பார் என்று பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவித்தது.
சிங்கப்பூரும் சீன நகரமான ஷென்செனும் மின்னிலக்க வர்த்தகம், தரவுப் பகிர்வு ஆகியவை தொடர்பான இருதரப்புத் திட்டத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.