காலையில் குழந்தை பெற்ற கல்லூரி மாணவிக்கு மாலையில் காதலருடன் மணம் முடித்த போலிசார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியுடன் பழகி, அவரைக் கர்ப்பமாக்கிய ஆடவருக்கு அப்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர் திண்டிவனம் போலிசார்.

திண்டிவனத்தை அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்பவரின் மகளான 20 வயது கோகிலா, தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை இறுதியாண்டு பயின்று வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பரமசிவம் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நெருங்கிய பழக்கத்தில் கர்ப்பமான கோகிலா, அதனை வீட்டில் சொல்ல பயந்து, கல்லூரிக்குச் சென்று வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கோகிலாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது.

அதனை அறிந்துகொண்ட கோகிலாவின் பெற்றோர் அவரை ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக திண்டிவனம் அரசு மருத்துவமனை நிர்வாகம் போலிசில் புகார் அளித்தது.

பரமசிவம், கோகிலா ஆகியோரை திண்டிவனம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்ததில், இருவரும் காதலை ஒப்புக்கொண்டனர்.

கோகிலாவைத் திருமணம் செய்துகொள்ள பரமசிவம் சம்மதித்ததையடுத்து, திண்டிவனம் மகளிர் காவல்நிலையம் அருகே உள்ள கோயிலில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

#பிரசவம்#திருமணம்#கல்லூரிமாணவி#திண்டிவனம்#தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!