தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

1 mins read
d4097990-3a69-4d06-a477-3d36e85f99a9
நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, அவர்களது உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். - படம்: ஊடகம்

நாகப்பட்டினம்: கோடியக்கரையில் இருந்து 15 நாட்டிகல் தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் நாகப்பட்டின மீனவர்கள். அப்போது கடற்கொள்ளையர்கள் சூழ்ந்து கொண்டு, இரும்புக் கம்பி, கட்டைகளைக் கொண்டு மீனவர்களைக் கடுமையாகத் தாக்கினர். பின்னர், தமிழக மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

அந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகன் என்பவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறிப்புச் சொற்கள்