You are here

இளையர் முரசு

மன அழுத்தத்தில் இருந்து மீள்வோம்

வைதேகி ஆறுமுகம்

மனதளவில் பாதிக்கப்பட்டோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரையும் நல்வழிப்படுத்த நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர், 24 மணி நேர ஆலோசனை போன்ற பலதரப்பட்ட சேவைகளைச் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் (Samaritans of Singapore) வழங்கி வருகிறது. அந்த வகையில் வெவ்வேறு காரணங்களி னால் மனதளவில் துவண்டுபோய் வாழ்வில் இருளைச் சந்தித்திருக்கும் இளையர்களுக்கு உதவும் நோக்கில் இம்மாதம் 10ஆம் தேதியன்று ‘த்ரு தி நைட்’ (#Throughthe Night) எனும் இயக்கத்தை இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தின் மூலம் இச் சங்கம் தொடங்கவிருக்கிறது.

இலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்

உள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’ என்ற நூலைச் சென்ற ஆண்டிலிருந்து வகுப்பில் படித்துப் பயன்பெற்ற உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவர்கள், அவருடன் நிகழ்ந்த உரையாடலில் தங்கள் ஐயங் களைத் தீர்த்துக்கொண்டதோடு அவர் பகிர்ந்துகொண்ட புதிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டனர். ‘கூவி அழைக்குது காகம்’ என்ற புத்தகத்தை மாணவர்கள் அவ்வப்போது வகுப்பின் தொடக் கத்தில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் படிப்பார்கள்.

துயர் துடைக்க பயிலும் இம்ரான்

உயர்நிலை நான்கில் பயின்றபோது ஆசியப் பெண்கள் நல்வாழ்வுக் கழகத்தில் மூன்று வாரங்களுக்கு வேலையிடப் பயிற்சியில் ஈடுப்பட் டிருந்தார் 21 வயது முஹம்மது இம்ரான் ஜ‌ஷிருதீன். அங்கு நோயால் வேதனையுற்ற உடல் குறையுள்ளோரையும் முதியோரை யும் பார்த்த திரு இம்ரான் அவர்களைப் போன்றவர்களுக்கு எதிர்காலத்தில் உதவவேண்டும் என்று உறுதி பூண்டார்.

பாரம்பரியக் கலைகள் வளர்த்த தமிழ்த் திருவிழா

ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கபடி, நாடகம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்த்து ரசிப்பதுடன் அதில் ஈடுபட்டு பார்க்கவும் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பளித்தது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ்த் திருவிழா.

பார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு

பல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில், நம் அன்றாட வாழ்வுக்கும் நமக்கு நெருக்கமான வர்களுக்கும் எதிர்காலத்தில் எம்மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? என்பதை ‘கடல்’ குறும்படம் விவரிக்கும்.

நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியிலிருந்து அண்மையில் பட்டயம் பெற்ற தமிழ் மாணவர் களால் தயாரிக்கப் பட்டிருக்கும் ‘கடல்’ எனும் குறும்படம், இரண்டாவது முறையாக நடை பெறும் ‘தெமாசெக் 20/20’ என்ற குறும்படப் போட்டியில் இடம் பெற்றுள்ள படைப்புகளில் ஒன் றாகும்.

பொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்

எஸ்.வெங்கடேஷ்வரன்

பொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93 மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார். “தற்போது கல்வி நிதி உதவி பெற்றவர்கள், எதிர்கால பொதுச் சேவை அதிகாரிகள் ஆவார்கள். இவர் கள் சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவ மைத்து நம் நாட்டின் முன்னேற்றத்தை வழிநடத்துவார்கள். சிங்கப்பூர் சீரும் சிறப்புமாக இருக்க, நமக்குப் பல துறை களில் திறமைசாலிகள் வேண்டும்.

Pages