கியூஆர் குறியீடு

தோக்கியோ: சிங்கப்பூர் மற்றும் ஏழு ஆசிய நாடுகளிலிருந்து ஜப்பான் செல்லும் சுற்றுப்பயணிகள் விரைவில் ஒரு புதிய கூட்டுக் கட்டணத் திட்டத்தின்கீழ் தங்கள் உள்ளூர் கியூஆர் குறியீட்டுப் பணப்பைகளைப் பயன்படுத்தி தாங்கள் பொருள், சேவைகளுக்குப் பணம் செலுத்துவது எளிதாகும்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
மும்பை: கழுத்தணியில் இணைக்கப்பட்டிருந்த பதக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த கியூஆர் குறியீடு, மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுவனை அவனுடைய பெற்றோருடன் மீண்டும் சேர்த்து வைக்க காவல்துறைக்குக் கைகொடுத்தது.
புனிதவெள்ளியை ஒட்டிய நீண்ட வாரயிறுதியில், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளை காரில் கடந்துசென்ற 64 விழுக்காட்டுப் பயணிகள், கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் வசதியை, கடந்த இரு நாள்களில் 86,000 பேர் பயன்படுத்தியுள்ளனர்.