You are here

சிங்க‌ப்பூர்

பெற்றோர் - பிள்ளைகள் பிணைப்பை வலுப்படுத்தும் கற்றல் கண்காட்சி

ரூபனேஸ்வரன் ஞானசுப்பிரமணியன்

பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாக இணைந்து பிள்ளைகளின் அறிவாற்றலைத் தூண்டும் பல் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கும் கண்காட்சி ஒன்று சிங்கப்பூர் எக்ஸ்போ ஹால் 6ல் நடைபெறுகிறது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஸ்பியர் எக்ஸிபிட்ஸ் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ‘கிட்ஸ் அகடமி’ கண்காட்சி யில் சுவாரஸ்யமான வழிகளில் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச் சிக்கு உதவும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

நியமன எம்.பி பதவிக்கு அரசு துரைசாமி பரிந்துரை

சிங்கப்பூர் துறைமுக ஊழியர் தொழிற்சங்கத்தின் பொதுச் செய லாளரான 50 வயது திரு அரசு துரைசாமியை நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலாளர் இயக்கம் பரிந்துரை செய்துள்ளது.

ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து அவர்கள் மாற்றுத் திறன்கள் பெறுவதை திரு அரசு பெரிதும் ஆதரிப்பவர் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

முதல்வர் நாராயணசாமி: ஆளுநர்களிடம் இருந்து விடுதலை பெற போராடுகிறோம்

புதுச்சேரி: சுதந்திர போராட்டத்தைப் போல் ஆளுநர்களிடம் இருந்து விடுதலை பெற போராடி வருகிறோம் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். “புதுச்சேரியில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்புப் பற்றி பிரதமர் மோடி காங்கிரசிடம் கற்றுக்கொள்ள வேண்டும். நள்ளிரவு 2 மணிக்குக் கூடப் பெண்கள் தனியாக நகைகள் அணிந்து பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலை புதுச்சேரியில் உள்ளது.

17 தொடக்கப்பள்ளிகளில் பாதிக்கு மேலான இடங்கள் நிரப்பப்பட்டன

தொடக்கநிலை ஒன்றிற்கான முதற்கட்டப் பதிவில் 17 பள்ளி களில் பாதிக்கு மேலான இடங்கள் அப்பள்ளிகளில் படிக் கும் மாணவர்களின் உடன்பிறந்தோரால் நிரப்பப்பட்டன. கடல்நாக ஆண்டான 2012ல் பிறந்த அதிகமான குழந்தை கள் அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் தொடக்கப் பள்ளி ஒன்றிற்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் அண்மையில் கூறினார். அடுத்தகட்டப் பதிவான, 2-ஏ ஜூலை 4 அன்று தொடங்கும். பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், பள்ளி ஆலோசனை, நிர்வாகக் குழு ஆகியவற்றில் உறுப்பினராகவுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளை இதில் பதிவு செய்யலாம்.

மூத்தோரிடம் $5 மி. ஏமாற்றிய முன்னாள் வங்கியாளருக்கு சிறை

ஹெஜ்எஸ்பிசி வங்கி நிறுவனத்தின் முன்னாள் மூத்த துணைத் தலைவரான 39 வயது எமிலின் தங் வெய் லெங், $5.2 மில்லியனுக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் 10 ஆண்டு, ஆறு மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். தீர்ப்பின்போது மொத்தம் 223 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. முன்னதாக 34 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட தங், தன் குடும்ப உறுப்பினர் நால்வர் உட்பட ஐந்து மூத்த குடிமக்களை ஏமாற்றியுள்ளார்.

5 வாகனங்கள் மோதியதில் 2 பேர் காயம்

தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணிக்கு ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் காயமுற்றனர். ஒரு கனரக வாகனம், ஒரு எஸ்பிஎஸ் பேருந்து, இரு லாரிகள், ஒரு கார் ஆகியவை ஒன்றன்மீது ஒன்று மோதியதில் கனரக வாகனத்தை ஓட்டிய 50 வயது ஆடவரும் காரில் பயணியாக இருந்த 18 வயது பெண்ணும் காயமடைந்தனர். இருவரும் சாங்கி பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் தெரிவித் தது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.

1.6 மில்லியன் மக்களுக்கு பற்றுச்சீட்டுகள், பணம் நிரப்புதல்

சிங்கப்பூரர்களில் 1.6 மில்லியன் பேருக்கு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டுகள், மெடி சேவ் கணக்கில் பணம் நிரப்புதல் என $1 பில்லியன் மதிப்பிலான சலுகைகள் விரைவில் கிடைக்க வுள்ளன என்று நிதி அமைச்சு நேற்று அறிவித்தது. தகுதிபெறும் கிட்டத்தட்ட 1.39 மில்லியன் சிங்கப்பூரர்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் $300 மதிப்புள்ள ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுக் குத் தாங்கள் தகுதியானர்களா என்று குறுஞ்செய்தி மூலம் தெரி விக்கப்படுவார்கள்.

எஸ்பிஎஸ் ஓட்டுநர் தற்காலிக நீக்கம்

எஸ்பிஎஸ் ஓட்டுநர் ஒருவர், வழியைத் தவறவிட்டு ஆயர் ராஜா விரைவுச் சாலையில் பேருந்தை பின்பக்கமாக ஓட்டியதற்காக தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள் ளார். லோயர் டெல்டா சாலைக்கு வெளியேறும் வாயிலக்கு அருகே விரைவுச்சாலையில் அபாயகரமான முறையில் சேவை எண் 147e பேருந்தை அவர் ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஓபைக்குக்கு காலக்கெடு

சைக்கிள் பகிர்வு நிறுவனமான ஓபைக் சிங்கப்பூரில் தனது சேவைகளை இவ்வாரம் அதிர டியாக நிறுத்தியது. ஆனால் சாலைகளில் தாறு மாறாக ஆங்காங்கு நிறுத்தப் பட்டுள்ள சைக்கிள்களை அது அகற்றவில்லை. இந்நிலையில் பொது இடங் களில் உள்ள சைக்கிள்கள் ஜூலை 4ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ஒபைக்குக்கு நிலப் போக்கு வரத்து ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. அந்நிறுவனத்தின் சுமார் 14,000 சைக்கிள்கள் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

டிரம்ப்-கிம் சந்திப்பு; மீண்டும் நினைவுப் பதக்கங்கள் வெளியீடு

படம்: நாணய ஆலை

பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் சிங் கப்பூர் நாணய ஆலை மீண்டும் டிரம்ப்-கிம் உச்சநிலை சந்திப்பை நினைவுகூரும் பதக்கங்களை வெளியிடுகிறது. இம்மாதம் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு உலக வர லாற்றில் முக்கிய இடம் பிடித்துள் ளது. இதனை நினைகூரும் வகையில் மீண்டும் நினைவுப் பதக்கங்களை நாணய ஆலை வெளியிடுகிறது. அரை அவுன்ஸ் தங்கப் பதக்கத்தின் விலை 1,380 வெள்ளி. ஒரு அவுன்ஸ் வெள்ளி பதக்கத்தின் விலை 118 வெள்ளியாகும்.

Pages