You are here

இந்தியா

அங்கன்வாடிகளில் ஆங்கில வழிக்கல்வி: அமைச்சர் தகவல்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அத்துறை யின் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டு முதல் அங்கன்வாடி களில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டார். “தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இரண்டாயிரம் அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. அவற்றில் அடுத்த ஆண்டு முதல் மழலையர் வகுப்புகள் மற்றும் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும். “பாலர் வகுப்புகளை முடித்த பிறகு அரசுப் பள்ளிகளில் ஆங் கில வழியில் கல்வி பயில இந்தக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

கத்திமுனையில் பெண்களை சீரழித்த வாடகைக் கார் ஓட்டுநர் அதிரடிக் கைது

சென்னை: கத்திமுனையில் பல பெண்களை மிரட்டிப் பாலியல் வன்புணர்வு செய்த வாடகைக் கார் ஓட்டுநரைப் போலிசார் கைது செய்துள்ளனர். சென்னை கிழக்குக் கடற் கரைச்சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து அந்த ஓட்டுநர் இவ்வாறு செய்துள்ளார். இப்பகுதியில் ஒரு கும்பல் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்வதாக வும், நகைகளைக் கொள்ளையடிப்ப தாகவும் அண்மையில் தகவல் பரவியது. இதுகுறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் இவ்வாறு பாதிக்கப்பட்டதாகப் புகார் அளித்தார்.

இந்தியாவின் ஆகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

இந்தியாவின் ஆகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்’ அடுத்த மாதம் 25ஆம் தேதி நடப்புக்கு வரவுள்ளது. வசதிகுறைந்த சுமார் 100 மில்லியன் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும். என்றும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் காப்புறுதி வழங்கப்படவுள்ளது. இதற்கு இந்தியா சுமார் 120 பில்லியன் ரூபாயை ஆண்டுதோறும் காப்புறு திக் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம்

சென்னை: மறைந்த முதல்வர் காம ராஜருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என தக்‌ஷிண மாரா நாடார் சங்கம் வலியறுத்தி உள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்னை கடற்கரையில் கலங் கரை விளக்கம் அருகே அமைந் துள்ள காமராஜர் சிலைக்கு அடுத்தபடியாக அவரது நினைவி டம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி அண்மையில் காலமானார்.

தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக ஜலகண்டபுரம் (சேலம்) தேர்வு

சென்னை: தமிழகத்தின் சிறந்த பேரூராட்சியாக ஜலகண்டபுரம் தேர்வுபெற்றுள்ளது. இது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இதற்குரிய விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதற்கிடையே தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிப்பளையம் பேரூராட்சி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

ஒரு லட்சம் பனைவிதைப் பந்துகள் நடுவதே இலக்கு: திருமா தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் பனை விதைப் பந்துகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீர் வளத்தை காக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். “தமிழகம் முழுவதும் பனை விதைப் பந்துகளை நடவேண்டும் என்பதே எனது இலக்கு. ஒரு காலத்தில் தமிழகத்தில் 30 கோடிக்கும் அதிகமாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை இப்போது 3 கோடியாகக் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் ஆவியாகாமல் தக்கவைத்து நீர்வளத்தைக் காப்பதில் பனை மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன,” என்றார் திருமாவளவன்.

தரமான கல் வியை அளிக்க உறுதி பூண்டுள் ளோம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் உயர் கல்விக்கான சேர்க்கை விகிதம் 48 விழுக்காடு அளவுக்கு அதிக ரித்துள்ளதாக முதல்வர் பழனி சாமி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை யொட்டி நேற்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அதிக ளவு பங்களித்தது தமிழகம்தான் என்றார். தேசியக் கொடியை ஏற்றி வைத்ததைப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திரப் போராட்டத் தியாகிக ளுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். “ஜெயலலிதா வழியில் செயல் படும் அதிமுக அரசு ஏழைகளுக் காகப் பாடுபட்டு வருகிறது.

20 டிஎம்சி மழை நீர் வீணாகக் கடலில் கலந்தது

சென்னை: நீர் மேலாண்மையில் தமிழக அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட் டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழக அரசு அலட்சியப்போக்கில் செயல் பட்டு வருவதாக அவர் விமர் சித்துள்ளார். இந்த அலட்சியம் காரணமாக கடந்த சில நாட்களில் மட்டும் 20 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிவிட்டதாக அவர் சுட்டிக் காட்டி உள்ளார். “கர்நாடகாவிலும் கேரளாவிலும் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதி களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள அணைகளும் மேட்டூர் அணையும் நிரம்பி வழிகின்றன.

எதிலும் லஞ்சம்: நீதிபதி அதிருப்தி

சென்னை: மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, விதிமீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவை தொடர்பில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித் துள்ளது. மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக ஒரு வழக்கின் விசாரணையின்போது நீதிபதி சுப்பிரமணியம் கவலை தெரிவித்தார். “சென்னை மாநகராட்சியில் கட்டட ஒப்புதல் உள்ளிட்ட எந்தச் சான்றிதழையும் லஞ்சம் தராமல் பெற முடி யாத நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்,” என்றும் நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

‘முதல்வரின் கையைப் பிடித்துக் கெஞ்சினேன்’

சென்னை: காலஞ்சென்ற திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்திருக்காவிட்டால் தம்மையும் அவருக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என திமுக செயற் குழுக் கூட்டத்தில் பேசியபோது மு.க. ஸ்டாலின் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார். மேலும் கருணாநிதியை மெரி னாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி, வெட்கத்தை விட்டு முதல்வர் பழனிசாமியின் கைகளைப் பிடித்துக் கெஞ்சியதாக வும் அவர் குறிப்பிட்டார். திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Pages